வாலாஜாபாத் ஒன்றியம் சின்னிவாக்கம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வாலாஜாபாத் ஒன்றியச் செயலாளர் பா.கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் சரவணன் பேசியதாவது:-
தமிழகத்தில் விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் தேர்தலில் அ.தி. மு.க. அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்கான அனைத்து பணிகளையும் அ.தி.மு.க.வினர் தற்போதிருந்தே உறுதியுடன் செய்ய வேண்டும். மக்களை சந்தித்து நமது கட்சியினர் தீவிரமாக அ.தி.மு.க.விற்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்றார்.
இதே போன்று வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஊத்துக்காடு, வாரணவாசி, அத்தி வாக்கம் போன்ற அனைத்து இடங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், சின்னிவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் சத்தியா, மாவட்ட துணைச்செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ், வள்ளி நாயகம், சோமசுந்தரம், அக்ரி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment