background img

புதிய வரவு

குழந்தை திருமணம் உச்ச நீதிமன்றம் கவலை

புதுடெல்லி: நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பது பற்றி உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், குழந்தை மற்றும் வயதுக்கு வராதோர் (மைனர்) குறித்து உள்ள குழப்பத்தை தெளிவுபடுத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறிப்பாக, இந்திய தண்டனை சட்டத்தில் 16வயதுக்கு உட்பட குழந்தையை மைனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து திருமண சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் மைனர் என்று கூறப்பட்டுள்ளது. 18 வயதானோருக்கு ஓட்டளிக்கும் உரிமை உள்ளது. ஆனால், 18 வயது உள்ளவர்கள் தேர்தலில் நிற்க முடியாது. இந்த குழப்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி தல்வீர் பண்டாரி தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது, ‘மைனர் திருமணங்களை தடுக்க சட்டம் உள்ளது. எனினும், நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பது கவலையளிக்கிறது. குறிப்பாக அக்ஷய திருதியை போன்ற தினங்களில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன‘‘ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts