background img

புதிய வரவு

சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் டைரக்டர் சீமான் பேட்டி

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாம் தமிழர் இயக்கம் பிரசாரம் செய்யும் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நாம் தமிழர் இயக்க கூட்டம் நடந்தது.

மாநில தலைவரும், சினிமா டைரக்டருமான சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இறக்க காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. தி.மு.க. தலைவர் கருணாநதி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் முடியும் தருவாயில் குடிசை வீடுகளை மாற்றி காங்கிரட் வீடுகள் கட்டி தருவதாக கூறுகிறார். இந்த திட்டத்தை முன்பே செய்திருக்க வேண்டும். ஆட்சி முடியும் தருவாயில் தற்சமயம் அறிவிக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் தெருவில் நூலகங்கள் இல்லை. ஆனால் தெருக்கள் தோறும் பிராந்தி கடைகள் (டாஸ்மாக்) உருவாகியுள்ளன. வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆனால் 60 அடி ஆழத்திற்கு பொக்லைன் கொண்டு மணல் அள்ளுகிறார்கள்.

இவ்வாறு மணல் அள்ளு வதால் குடிநீர் திட்டமும் அடியோடு பாதிக்கிறது. மேலும் விவசாய விளை நிலங்களின் உற்பத்தியும் பாதிக்கிறது. இந்தியாவில் ஒரு லட்ச விவசாயிகள் பட்டினியால் இறக்கிறார்கள். ஆனால் மத்திய அரசின் உணவு கிடங்கில் உணவு பொருட் கள் மக்கி மக்களுக்கு பயன் படவில்லை.

பாராளுமன்றத் தில் தமிழக மீனவர்கள் இறந்தால் இந்தியன் இறந்து விட்டார் என கூறுகிறார்கள். தமிழன் இறந்து விட்டதாக யாரும் கூறவில்லை. காங்கிரஸ் கட்சி காமன் வெல்த் ஊழல், பீரங்கி ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் போன்ற ஊழலில் சிக்கி திணறுகிறது.

காங்கிரஸ் கட்சி நமக்கு எதிரி. காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க நாம் தமிழர் இயக்கத்தினர் வீடு வீடாக சென்று தேர்தலில் கை சின்னத்திற்கு ஓட்டளிக்க கூடாது என மக்களிடத்தில் தெளிவாக பிரசாரம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியை தேர்லில் தோற்கடித்து விட்டு இதே இடத்தில் மீண்டும் வெற்றி கூட்டங்கள் நடத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்துக்கு செல்வ ராஜ் தலைமை தாங்கினார். பழ.செல்வராஜ் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் தீனதயாளன், கவிஞர் அமீர், புலவர் தமிழ் கூத்தன், கோட்டைக்குமார் உள்பட பலர் பேசினார்கள். ஜெயக்குமார் வரவேற்றார். முடிவில் சதீஷ் நன்றி கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts