background img

புதிய வரவு

பால், காபி தூள் விலை அதிகரிப்பு: ஓட்டல்களில் மீண்டும் டீ-காபி விலை உயர்வு


பால், காபி தூள் விலை அதிகரிப்பு:
 
 ஓட்டல்களில் மீண்டும்
 
 டீ-காபி விலை உயர்வுதனியார் பால் விலை, காபி தூள் விலை உயர்வால் ஓட்டல்களில் மீண்டும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. சாதாரண ஓட்டல்களில் டீ ரூ.5-ம், காபி ரூ.7-ம் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த விலை உயர்த்தப்பட்டது.


சமையல் கியாஸ், சர்க்கரை, பால் விலை உயர்வால் டீக்கடைகளில் திடீரென விலையை உயர்த்தினார்கள். இந்த நிலையில் தனியார் பால் விலை சமீபத்தில் ரூ.2 உயர்ந்தது. காபி தூள் விலை கிலோவிற்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மீண்டும் டீ, காபியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து விட்டது.

சென்னை நகரில் உள்ள ஹாட் சிப்ஸ் கடைகளில் இதுவரை மினி காபி, மினி டீ ரூ.8-க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு
ரூ.9-க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், புரசைவாக்கம், உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts