ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ராஜ்யசபா உறுப்பினருமான என்.ஜனார்த்தன ரெட்டிக்கு, விரைவில் கவர்னர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவர் வகித்து வரும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி இடத்திற்கு காலி ஏற்படுகிறது. இந்த ராஜ்யசபா பதவியை, தன் கட்சியை காங்கிரஸ் கட்சியில், இணைப்பதாக அறிவித்துள்ள பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவிக்கு அளிக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து டில்லியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆந்திர மாநில காங்கிரசாரிடையே பேச்சு நடத்தி வருகின்றனர். ஆந்திராவை சேர்ந்த மூத்த காங்கிரஸ்காரரான ஜனார்த்தன ரெட்டி, மத்திய அமைச்சர் பதவி வேண்டுமென கோரி வருகிறார். அவருக்குள்ள அரசியல் அனுபவம், முதிர்ந்த வயதையொட்டி, கவர்னர் பதவி அளிப்பதே சிறந்ததாக இருக்குமென, காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
கவர்னர் பதவி வகிக்க ஜனார்த்தன ரெட்டி சம்மதம் தெரிவித்ததால், அவரை, விரைவில் ஏதாவது ஒரு மாநிலத்தின் கவர்னர் பொறுப்பில் நியமனம் செய்ய கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. தன் கட்சியை காங்கிரசில் இணைக்க முடிவு செய்துள்ள நடிகர் சிரஞ்சீவியை திருப்திபடுத்த, அவருக்கு முதலில் ராஜ்யசபா எம்.பி., பதவி அளித்து கவுரவிக்க வேண்டுமென ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் மேலிடத்தின் கவனத்திற்கு எடுத்துரைத்துள்ளனர். சிரஞ்சீவி ராஜ்யசபா பதவியை ஏற்றுக்கொண்டால், அடுத்து மத்திய அமைச்சரவை விஸ்தரிக்கப்படும்போது, அமைச்சராகவும் நியமிக்கப்படும் வாய்ப்பு கிடைக்கும் என காங்கிரசார் கூறுகின்றனர்.

0 comments :
Post a Comment