background img

புதிய வரவு

இளம்பெண்களை கெடுக்கிறார் அமலா பால்!

அமலா பால் இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக பேட்டி கொடுத்து, இளம்பெண்களை கெடுக்கிறார் என்று இந்தி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. வீரசேகரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அந்த படத்தை தொடர்ந்து சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் கள்ள உறவு கொள்ளும் மருமகளாக நடித்திருந்தார். இதற்கு சமூக அமைப்புகள், மாதர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் பட்டிதொட்டியெங்கும் அமலா பால் பிரபலமானார். அதேநேரம் மைனா படமும் அமலாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.


இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அமலா பால். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், தான் ஒரு கேளிக்கைப் பிரியை என்றும், விருந்து கேளிக்கைகள் எனக்கு பிடித்தமானவை என்றும் கூறியுள்ளார். வார இறுதி விருந்துக்காக எப்போதும் காத்திருப்பதில்லை என்றும், எப்போதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் நண்பர்களை அழைத்து பார்ட்டி கொண்டாடுவேன். கேரளாவில் என்னை வீட்டில் பார்க்க முடியாது. நிறைய நேரம் நண்பர்களுடன் பார்ட்டிகளில்தான் இருப்பேன். என் வயது பெண்களுக்கு இது பிடித்திருக்கிறது, என்றெல்லாம் கூறியுள்ளார்.


அமலாபாலின் இந்த பேட்டிக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகை அமலாபாலுக்கு இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடப்பது வாடிக்கையாகி விட்டது. சிந்து சமவெளி படத்தில் சக நடிகைகள் நடிக்கத் துணியாத கேரக்டரில் நடித்தார். அப்போதே அவரை கண்டித்தோம்.இயக்குனர் தான் பொறுப்பு என நழுவினார். இப்போது மேற்கத்திய பழக்கமான பார்ட்டி என்ற கேளிக்கை இரவு கூத்துகளுக்கு ஆதரவாக பேசி கலாசார சீரழிவுக்கு வழி வகுத்துள்ளார். அவர் பேட்டி இளம்பெண்கள் மனதை மாசுபடுத்துவது போல் உள்ளது. இவர் பார்ட்டிகளுக்கு போய் புரட்சி செய்யட்டும். அதை பகிரங்கமாக பேசி பண்பாட்டை சிதைக்க வேண்டாம். இளம்பெண்கள் அனைவருமே இப்படிப்பட்டவர்கள்தான் என்ற எண்ணத்தை விதைக்கும் முயற்சி இது. இனியும் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டால் தக்க பாடம் புகட்டுவோம், என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts