background img

புதிய வரவு

கொத்தமல்லி ரைஸ்

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி 2 கப்
கொத்தமல்லி 1 கட்டு
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு
உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் 1
முந்திரிபருப்பு 10
பாதாம் 1/4 கப்
நெய் 1 டீஸ்பூன்

செய்முறை

பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் மூன்றையும் எண்ணெயில் வறுத்து வதக்கிய கொத்தமல்லித் தழையுடன் உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியுடன் அரைத்த விழுதை நன்றாகக் கலந்து அப்படியே குக்கரில் வைக்கவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.முந்திரிபருப்பு,பாதாம்இரண்டையும் நெய்யில் வறுக்கவும்.குக்கரில் இருந்து கொத்தமல்லி ரைஸ் எடுத்து வதக்கிய வெங்காய்ம்,வறுத்த பருப்புகள் சேர்த்து கிளறவும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts