background img

புதிய வரவு

பிரசவ நேர பாதுகாப்பு

பிரசவ நேரத்தில் அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு அதிகளவு உயிரிழப்பு நிகழ்கிறது. இந்த சூழ்நிலையில் இரத்தத்தின் வகை தெரிந்து கொண்டு முன்பே அதே வகை ரத்தத்தை ஏற்றிக் கொள்வது ஆபத்தை தவிர்க்க உதவும். மேலும் அந்த வகை ரத்தத்தை முன்பே கையிருப்பு வைத்திருப்பதும் நல்லது.

பிரசவத்திற்கு பின் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்::

இன்று பிரசவத்திற்கு பின் 50% உயிரிழப்புகள் நேரிடுவதை பரிசோதனைகள் தெரிவிக்கின்றது. பிரசவத்திற்குப் பின் வரும் 1 வார கால கட்டம் மிக மிக முக்கியமான கால கட்டமாகும்..

இந்த நேரங்களில் கர்ப்பபை, சிறுநீர்பை இவைகளில் தொற்று நோய் தாக்ககும் அபாயம் உள்ளதால் அவை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.அப்படி ஏற்படும் சூழநிலையில் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பிரசவத்திற்கு பின் காணப்படும் சில ஆபத்தான அறிகுறிகள்::

மயக்கம் மற்றும் வலிப்பு வருதல், அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, காய்ச்சல், அடிவயிற்றில் வலி ஏற்படுவது, வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு, வலி வீக்கம் ஆகியவை காலிலோ அல்லது மார்பிலோ காணப்படுகிறது சிறு நீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, கண்இமை,நாக்கு,உள்ளளங்கை வெளிரி காணப்படுவது போன்ற பிரச்சினைகள் ஒரு சிலருக்கு ஏற்படும்.இந்த பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது மிகவும் நல்லது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts