இயக்குநர் செல்வராகவனுக்கும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் இன்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
மணமகளின் இல்லத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இயக்குநர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று, இப்போது 'நண்பர்களாக' உள்ளனர்.
இந்த நிலையில் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வந்தார் கீதாஞ்சலி. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் இவர். செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் நாளடையில் காதல் மலர்ந்தது.
பெற்றோர் துணையுடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தனர்.
இப்போது இருவருக்கும் நிச்சதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன் மனைவி லதாவுடன் நிச்சயதார்த்தத்துக்கு வந்து வாழ்த்தினார்.
வரும் ஜூலை 3-ம் தேதி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடக்கிறது.
0 comments :
Post a Comment