background img

புதிய வரவு

தி.மு.க. பொதுக் குழு: இராசா நீக்கப்படுகிறார்?

சென்னையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் கூடிய உரிமம் வழங்கப்பட்டதில் வழி காட்டு நெறிமுறைகளும், நடைமுறை விதிகளும் சில நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் மீறப்பட்டுள்ளதென கூறி, முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, தொலைத் தொடர்புத் துறை செயலராக இருந்த சித்தார்த் பெஹூரியா, இராசாவின் தனிச் செயலராக பணியாற்றிய ஆர்.கே.சண்டோலியா ஆகியோரை நேற்று கைது செய்தது. இன்று அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க.வின் நிறுவனரான அமரர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்த பின், தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியின் பொதுக் குழு கூடுகிறது. எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக விரிவாக அலசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கும் பொருட்டு, ஆ.இராசா சட்டப்படியான நடவடிக்கைளில் இருந்து குற்றமற்றவர் என்று விடுதலையாகி வரும் வரை அவரை கட்சியிலிருந்து நீக்கி வைக்கும் முடிவு எடுக்கப்படும் என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது.

தி.மு.க. பொதுக் குழுவில் இன்று நிறைவேற்றப்படும் தீர்மானங்களை விளக்கி இன்று மாலை சென்னை சைதாப்பேட்டையில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கருணாநிதி உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts