ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, அத்துறை முன்னாள், இன்னாள் அதிகாரிகள் இருவர் ஆகியோர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய புலனாய்வுக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செல்பேசி சேவைக்கான 2ஆம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் கூடிய உரிமம் வழங்கப்பட்டதில் செய்யப்பட்ட முறைகேட்டின் காரணமாக அரசுக்கு ரூ.1.76 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கை அளித்தார்.
இந்த முறைகேடு தொடர்பாக 2009ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்கு தொடர்ந்த மத்திய புலனாய்வுக் கழகம், இந்த முறைகேட்டில தொடர்புடைய ‘அடையாளம் தெரியாது நபர்கள்’ (unknown persons) மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120 பி (ஒன்று கூடி குற்றச் சதி செய்தது) கீழும், அதோடு இணைத்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13 (1), 13 (2) ஆகிய பிரிவுகளின் மீதும் வழக்குப் பதிவு செய்தது.
இதனடிப்படையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து பதவி விலகிய ஆ.இராசா, தொலைத் தொடர்புத்துறை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தபோது அத்துறை செயலராக இருந்த சித்தார்த் பெஹூரா, இராசாவின் தனிச் செயலராக இருந்த ஆர்.கே.சண்டோலியா ஆகியோரை நேற்று கைது செய்தது.
இவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்த ம.பு.க., “ஒன்றிணையந்த சேவைகள் நடத்த உரிமம் அளிப்பதில் நடைமுறையில் இருந்த வழிகாட்டுதல்களையும், முறைகளையும் மீறி, சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் கூடிய உரிமம் வழங்கிய முறைகேடு தொடர்பாக நடத்திய புலனாய்வில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில்” ஆ.இராசா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் இன்று டெல்லியில் பட்டியாலா இல்லத்தில் இயங்கும் ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment