background img

புதிய வரவு

முட்டை மிளகு மசாலா

தேவையான பொருட்கள்

வேக வைத்த முட்டை - 4
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 4
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.வேக வைத்த முட்டையை நான்காகக் கீறிக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.பிறகு நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.இப்போது மிளகுத்தூள்,தனியாத்தூள்,மிளகாய்த்தூள்,முட்டை ஆகியவற்றைச் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கிளறவும்.
முட்டை மசாலாவுடன் சேர்ந்து வந்ததும் இறக்கி விடவும்.
முட்டை மிளகு மசாலா ரெடி.இது சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள `சூப்பர் காம்பினேஷனாக' இருக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts