வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், நடிகர் ராம்கி மற்றும் அவரது மனைவி நிரோஷாவின் வீடுகள் ஏலம் விடப்படுகின்றன.
நிரோஷா. இவர்கள் செந்தூரப்பூவே, பறவைகள் பலவிதம் போன்ற படங்களில் இணைந்து நடித்து, பின்னர் நட்சத்திர தம்பதிகளாகவே மாறிவிட்டவர்கள் ராம்கியும் நிரஷாவும்.
இருவரும் கார்ப்பரேஷன் வங்கியில் 26 லட்சத்து 56 ஆயிரத்து 317 ரூபாய் கடன் வாங்கினர். இதுபோக மேலும் ரூ.25 லட்சத்து 40 ஆயிரத்து 74 ரூபாய் கடன் வாங்கினார்கள். இந்த கடன்களுக்காக சென்னை அண்ணா சாலை ஜெமினி பார்சன் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள இரண்டு வீடுகளை அடமானம் வைத்தனர்.
இவற்றில் ஒரு வீடு இரண்டாவது தளத்தில் 515 சதுர அடியில் உள்ளது. மற்ற வீடுகள் தரை மற்றும் முதல் தளத்தில் 1,140 சதுர அடியில் உள்ளன. வங்கிக்கு அவர்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை. அசலையும் வட்டியையும் செலுத்துமாறு வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இறுதி கெடுவும் விதிக்கப்பட்டது. ஆனாலும் கடன் செலுத்தப்படவில்லை.
இதையடுத்து ராம்கி, நிரோஷா வீடுகளை ஏலம் மூலம் விற்பனை செய்ய வங்கி முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment