சென்னை : ""இலவசங்களால் தான் ஏழைகள் காப்பாற்றப்படுகின்றனர்; அவர்கள் பட்டினியைப் போக்கியுள்ளது. விலை உயர்வால் வசதியுள்ளவர்களுக்கு பாதிப்பில்லை; அவர்கள் பட்டினியாக இல்லை,'' என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் அன்பழகன் அளித்த பதிலுரை: பற்றாக்குறை பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். வருவாய் கணக்கில் செய்யும் செலவு உபரியாக இருக்கும். மூலதனக் கணக்கில் தான் பெரிய அளவு கடன் ஏறுகிறது. அந்த செலவு அனைத்தும், சமுதாய கட்டுமானங்கள், சமூக நலன்கள் போன்றவற்றுக்காக சமுதாயத்துக்கு நல்லது செய்வதால், அது விரும்பத்தக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க கடன் தான். கடன் வாங்காதே என்கிறார். தி.மு.க., ஆட்சி 2001ல் முடிந்த போது, 28 ஆயிரம் கோடி ரூபாய் தான் கடன் இருந்தது. அதையே, கடன் சுமையை ஏற்றிச் சென்றதாக ஜெயலலிதா கூறினார். அவர்கள் வந்து ஆட்சி செய்து முடித்த போது, 56 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தது. அந்த கடன் தற்போது, 1 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த வரவு - செலவு, உற்பத்தி, வரி, வருவாய் பெருகியுள்ளன; திட்டங்கள் பெருகியுள்ளன. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து நிதி பங்கு, தமிழகத்துக்கு அதிகம் கிடைத்துள்ளது. எனவே, கடன் அதிகமானதில் எவ்வித குறைபாடும் இல்லை.
கடனால் தான் தமிழகம் வாழ்கிறது என்று நான் கூறியதை, நடை போடுகிறது என்ற அர்த்தத்தில் தவறான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் வாழ்கிறது என்று சொன்னது வளர்கிறது என்ற பொருளில் தான். விலைவாசி உயர்வுக்கு முதலில் இயற்கை தான் காரணம், இடைத்தரகர் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது. திருமணத்துக்கு கூட இடைத்தரகர்கள் உண்டு. விவசாயிகள் மட்டும் உலகில் வாழ்வதாக கருதவில்லை. அனைத்து தரப்பினரும் வாழ்கின்றனர். எனவே, விலைவாசி உயர்வதும், குறைவதும் நடக்கிறது. விலைவாசி உயர்வால், இங்குள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கோ, அமைச்சர்களுக்கோ, கலெக்டர்களுக்கோ பாதிப்பில்லை. ஆனால், ஏழை கூலிகளுக்கு பாதிப்பு உள்ளது. எனவே தான், 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, சலுகை விலையில் பருப்பு, பாமாயில் போன்வற்றை ரேஷன் கடைகள் மூலம் வழங்குகிறோம். இதனால், 1 கோடியே 70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் வசதியானவர்கள். அவர்களுக்கு விலை உயர்வால் பாதிப்பில்லை. எண்ணெய், பருப்பு விலையால் அவர்கள் பாதிக்கப்படவோ, பட்டினியாகவோ இல்லை. எனினும், விலை உயர்வைத் தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உணவுப் பொருட்களுக்காக 4,000 கோடி ரூபாயை வழங்கி, விலை உயர்வை கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், மக்களுக்கு பாதிப்பில்லை. அ.தி.மு.க., உறுப்பினர் சண்முகம் பேசும் போது, "குஜராத் போன்ற மாநிலங்களில் பெரிய வளர்ச்சி காணப்பட்டாலும், அடிதட்டு ஏழைகளின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்' என்றார். அது உண்மை தான். அந்த ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கு தான் இலவசங்கள் கொடுக்கிறோம். அந்த இலவசங்களால் தான் ஏழைகள் காப்பாற்றப்படுகின்றனர். அவர்கள் பட்டினியை அது போக்கியுள்ளது. வளர்ந்த நாடுகளில், வேலை செய்யாதவர்களுக்கு கூட சம்பளம் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. எனவே, இலவசங்கள் கேலிக்குரியதானதல்ல. மூலதனச் செலவுகளுக்கான கடன் தொகையை எடுத்து இலவசங்கள் ஏதும் தரவில்லை. யாருக்கு பாதிப்போ அவர்களுக்குத் தான் தரப்படுகிறது. ஏழைகளுக்கு மருந்து கிடைக்குமா என்று கவலைப்படுவோமே தவிர, வசதியானவர்களுக்கு மருந்து கிடைப்பதைப் பற்றி கவலையில்லை.
தமிழகத்தில் பயங்கரவாதம், நக்சலைட்கள் இல்லை. வன்முறை போராட்டங்கள் அதிகமில்லை. கடந்த காலங்களில் நடந்த குற்றங்களை விட, தற்போது நடப்பது குறைவு தான். கடந்த காலத்தில் செயல்பட்டதை விட, தற்போது போலீசார் மிக திறமையாகச் செயல்படுகின்றனர். செம்மொழி மாநாடு பற்றி பேசினர். முதல்வரின் புகழுக்காக அதை நடத்தியிருந்தாலும் தவறில்லை. முதல்வராக, எழுத்தாளராக, கலைஞராக உள்ளவரது புகழுக்காக ஏன் நடத்தக்கூடாது. அவர் பிறந்த ஜாதிக்காக நடத்தாமல் இருக்கலாம். தி.மு.க.,வின் கொடி, தோரணம், முதல்வர் கட்-அவுட் இல்லாமல், கோவையில் தமிழ் மணம் வீசியது. பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, கருத்தரங்குகள் நடந்தன. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் தஞ்சையில் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில், எங்கு பார்த்தாலும் அந்த அம்மையாரின் கட்-அவுட், படங்கள் தான் இருந்தன. அவர் புகழ் பாடும் மாநாடாக இருந்தது. அழைக்கப்பட்ட ஈழ அறிஞர்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டனர்.

0 comments :
Post a Comment