வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட்டில் இருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டு சென்றது. அதில், இங்கி லாந்து, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த 2 விமானிகள், அயர்லாந்து அதிபர் மேரி மெக்கலிசின் உறவினர் மற்றும் அதிகாரிகள் என 12 பேர் பயணம் செய்தனர். விமானம் பறந்த போது கடும் மூடு பனி பரவி இருந்தது. எனவே, விமானம் பறக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து “கார்க்” விமான நிலையத்தில் அந்த விமானத்தை தரை இறக்கினர் அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், அயர்லாந்து ஜனாதி பதியின் உறவினர் உள்பட 6 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாகினர். மற்றும் 6 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களின் எலும்புகள் முறிந்தன.
உடனே, அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தில் 2 பேர் லேசான காயத்துடன் தப்பினர். விபத்து நடந்த இடத்தை பிரதமர் பிரைன் கோவன் ஹெலிகாப்டரில் சென்று பார்த்தார். அயர்லாந்தில் உள்நாட்டு குட்டி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது இதுதான் முதல் முறை என்று கூறினார்.
0 comments :
Post a Comment