background img

புதிய வரவு

ஆட்சியை கைப்பற்றுவோம்: எகிப்து அதிபருக்கு ராணுவம் மிரட்டல்; நாட்டை விட்டு வெளியேறுங்கள்


ஆட்சியை கைப்பற்றுவோம்:
 
 எகிப்து அதிபருக்கு ராணுவம் மிரட்டல்;
 
 நாட்டை விட்டு வெளியேறுங்கள்எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கெய்ரோவில் உள்ள தக்ரிர் சதுக்கத்தில் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இருந்தும், அதிபர் முபாரக் பதவி விலக மறுத்து வருகிறார்.


செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தல் வரை பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என பிடிவாதமாக இருக்கிறார்.அதற்கு பொதுமக்கள் சம்மதிக்கவில்லை.தற்போது இப்போராட்டத்தில், டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பங்கேற்று வருகின்றனர்.

இதனால் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து தீவிரமாகி உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை தாக்கவோ அவர்களை அடக்கவோ ராணுவம் மறுத்து விட்டது. அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தக்ரிர் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

முன்னதாக அதிபர் முபாரக்குடன் பேச்சு நடத்த ராணுவ உயர் அதிகாரிகள் குழுவினர் சென்றனர். ஆட்சி மாற்றம் குறித்து அதிபருடன் பேச்சு நடத்தினர். இதற்கிடையே, தகவல் துறை மந்திரி அனாசல்-பிக்கி டி.வி.யில் தோன்றி பேசினார். அப்போது, அதிபர் பதவியில் இருந்து முபாரக் பதவி விலக மாட்டார். அவர் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

பிரதமர் அகமது ஷபிப் கூறும்போது, அனைத்து முடிவுகளும் எடுக்கும் உரிமை இன்னும் அதிபர் முபாரக்கிடம்தான் உள்ளது. அவர் பதவி விலகுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அறிவித்தார்.

இதனால், தக்ரிர் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து டி.வி. யில் ராணுவ மந்திரி பீல்டு மார்ஷல் உசேன் தந்தாலி மற்றும் 25 உயர் ராணுவ அதிகாரிகள் கூடியிருந்த காட்சி ஒளிபரப்பப்பட்டது.அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே ராணுவ கமாண்டர் ஜெனரல் ஹாசன் அல்-ரோயினி பேசினார்.

அப்போது, அதிபர் முபாரக் மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம் என்று மிரட்டல் விடுத்தார். நாடும், எம்மக்களின் நலனும்தான் முக்கியம் என மக்களின் கோரிக்கையை அவர் ஏற்கவேண்டும். ஆட்சி அதிகாரத்தை விட்டு விலக வேண்டும். இன்று இரவுடன் உங்கள் (மக்கள்) பிரச்சினை முடிவுக்கு வரும் என்றார்.

இதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியால் கரவொலி எழுப்பினார்கள். கடவுள் மிகப்பெரியவர் என்று உரத்த குரல் எழுப்பினர். தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் “வி” என்ற அடையாளமாக இரண்டு விரல்களை விரித்துக்காட்டி மகிழ்ந்து ஆனந்த நடனமாடினர்.

இதற்கிடையே முபாரக் பதவி விலக அமெரிக்கா பெரிதும் விரும்புகிறது. மக்கள் விருப்பப்படி அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனநாயகம் மலரவேண்டும் என அதிபர் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts