background img

புதிய வரவு

கருப்பட்டி பணியாரம்

தேவையானவை:

பச்சரிசி - 1 கிலோ
கருப்பட்டி - 300 கிராம்
வெல்லம் - 300 கிராம்
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரியை ஊற வைத்து இரண்டு நேரம் கழித்து நிழலில் காயவைத்து ஈரப் பதத்துடன் அரைத்து சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

மாவை அரைத்து உடனே செய்யக்கூடாது. எனவே, மாவை ஓரிரு நாட்கள் முன்னதாகவே அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை பொடியாக்கிப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் சூடேற்றவும்.

வெல்லமும், கருப்பட்டியும் கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து பாகு பதத்தில் இறக்கிக் கொள்ளவும்.

பின்னர், சலித்து வைத்துள்ள மாவில் பாகை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். அதன்பின்னர் நெய் தடவி மூடி வைக்கவும்.

பணியாரம் செய்யும் போது மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தோசை மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், அகலமான கரண்டியால் ஒவ்வொன்றாக ஊற்றவும். ஒரு புறம் வெந்து உப்பி வந்ததும், மறுபுறம் திருப்பிப் போடவும்.

பொன்னிறமாக வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைத்து நன்றாக எண்ணெய் வடிந்ததுவும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts