background img

புதிய வரவு

உலகக் கோப்பை 2011: ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ 2.3 கோடி விபத்துக் காப்பீடு!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ரூ 2.3 கோடிக்கு விபத்துக் காப்பீடு எடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

இதுதவிர, நிதி சார்ந்த இழப்புகளுக்கு மட்டும் ரூ 130 கோடியை காப்பீடாக எடுத்துள்ளது பிசிசிஐ.

இதுகுறித்து ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ரீனா பட்னாகர் கூறுகையில், "இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ சார்பில் குழு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வீரரும் தலா ரூ 2.3 கோடியை காப்பீடாகப் பெறுவார்கள். பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை இந்த பாலிசிக்கான காலகட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாத காலத்தில் வீரர்கள் யாரும் கடுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது உயிரிழக்க நேரிட்டாலோ முழுத் தொகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.

இதுதவிர, ஒவ்வொரு போட்டியையும் வெவ்வேறு தொகைக்கு காப்பீடு செய்துள்ளது பிசிசிஐ. இதன்படி போட்டி தடைப்பட்டாலோ அல்லது முழுக்க பாதிக்கப்பட்டாலோ குறைந்தது ரூ 2.5 கோடி முதல் ரூ 15 கோடி வரை இழப்பீடாகக் கிடைக்கும்", என்றார்.

1993-ம் ஆண்டு உலகக் கோப்பையிலிருந்து வீரர்களுக்கு குழு விபத்துக் காப்பீடு எடுத்து வருகிறது பிசிசிஐ என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts