பாட்னா:கால்நடை தீவன ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ், பீகார் முதல்வராக இருந்த போது, கால்நடை துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும்படி லாலுபிரசாத் உள்ளிட்ட பலர் சி.பி.ஐ., கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்களை பரிசீலித்த சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி பி.கே. ஜெயின், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து லாலு பிரசாத், முன்னாள் எம்.பி.,க்கள் ராணா, வித்யாசாகர் உள்ளிட்ட பலர் பாட்னாவில் உள்ள கோர்ட்டில் நேற்று ஆஜராயினர்.
0 comments :
Post a Comment