background img

புதிய வரவு

காசியில் வருண் திருமணம் சோனியாவிற்கு அழைப்பு

பரேலி:பா.ஜ.,வின் இளம் எம்.பி.,யும், முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனுமான வருணுக்கு, உ.பி., வாரணா சியில் மார்ச் 6 ல் திருமணம் நடக்கவுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட விமர்சகர் அருணா வாசுதேவின் மகள் யாமினியை, வருண் மணக்கவுள்ளார். யாமினி, டில்லியில் கிராபிக் டிசைனிங் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். வருணின் தாயாரும், பா.ஜ., லோக்சபா எம்.பி.,யுமான மேனகா நேற்று கூறியதாவது:மார்ச் 6 ல், வாரணாசியில் திருமணம் நடக்கிறது. காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கண்டிப்பாக அழைப்பு விடுக்கப்படும். திருமணம் முடிந்ததும் டில்லியிலும், வருணினின் தொகுதியான பிலிப்பிட்டிலும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும், என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts