background img

புதிய வரவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மாநகருக்கு சிறப்பு சேர்க்கும் திருக்கோவில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். 65 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் இக்கோவில் அமைந்து உள்ளது. 2000 ஆயிரம் வருடத்திற்கு முன் நாயக்கமன்னர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் பல அற்புதமான கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டு உள்ளது.

இக்கோவிலில் உள்ள அதிசய விவரங்களை அறிந்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்களும், வெளிநாட்டவரும் தினம் தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வருகின்றனர். இவர்களோடு தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்ட மக்களும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெய்வங்களை வழிபட வந்த வண்ணம் உள்ளனர்.

நாளுக்கு நாள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சாமியை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் வெளிமாநிலத்தவர்கள்தான் அதிகமாக வர தொடங்கி உள்ளனர். வெளிநாட்டவர்களும் கோவிலின் சிறப்புகளையும், வழிபாட்டு முறைகளையும் பார்க்க வருகின்றனர்.

இதனால் மீனாட்சி அம்மனின் மூலஸ்தானத்திற்குள் சிறியவர் முதல் பெரியவர்கள் அனைவரும் மீனாட்சி அம்மனை தரிசிக்கும் வகையில் மரப்பலகையிலான மேடையை அமைத்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனால் தற்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்றாலும் மீனாட்சி அம்மனை கண்குளிர தரிசனம் செய்ய முடிகிறது.

சிவன் பூஜித்த கோவில் ஆதியிலேயே இறைவன் இறைவி பராசக்தியானவளை மதுரையிலே மலையத்வஜ பாண்டியன் மகளாக அக்கினி குண்டத்திலே அவதரிக்கச் செய்தார். `தேவி மும்முலை தடா தகை' என்கிற பெயருடன் ஆய கலைகள் 64 நான்கினையும் தேர்ச்சியுடன் கற்று திக்விஜயம் செய்து இறுதியாக கைலாய மலையில் நந்தி மற்றும் பூத கணங்களை வென்று இறைவனை பாத்திரமாத்திரத்திலேயே அகந்தை அழிந்து தன் கணவர் இவரே என்று உணர்ந்து மதுரையிலே திருமணக்கோலம் பூண்டு வர வேண்டுகிறாள்.

இறைவன் சோமசுந்தர பாண்டியர் என்கிற பெயருடன் மதுரையிலே மாப்பிள்ளை கோலம்பூண்டு எல்லாம் வல்ல சக்தி அம்பிகை மீனாட்சியை திருமணம் செய்து கொள்கிறார். திருமண கோலத்திலேயே தன் ஆன்மாவினை நடுவூர் என்கிற மதுரையம்பதிலேயே ஆலயம் அமைத்து சிவபூஜை செய்கிறார்.

அவர் ஆத்மார்த்த பூஜை செய்த சிவ ஆலயமே மதுரை `இம்மையிலும் நன்மை தருவார்' ஆலயம் ஆகும். மேலும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ கால பைரவர் எழுந்தருளி உள்ளார். சிவனின் அம்சமாகிய பைரவரின் வடுகர் என்றும் சட்டநாதர் என்றும் ஆபதூதாரணர் என்றும் அழைக்கின்றார்கள்.

ஸ்ரீ கால பைரவர்;

சகல பிணிகளுக்கும் மனபயம், புத்தி தடுமாற்றம், ஊழ்வினை துன்பம், கடன் தொல்லைகள், தாமதமான செயல்பாடுகளுக்கும் விமோசனம் அளிக்கும் கண்கண்ட தெய்வம். இவரே கதி என சரணடையும் எல்லா பக்தர்களையும் இவர் நீடுழி வாழ வைத்துள்ளார்.

காலபைரவருக்கு இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும் மற்றும் தேய்பிறை அஷ்டமி அன்றும் விசேஷ பூஜை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்சிணாமூர்த்தி :

இந்த கோவிலில் சிவனின் அம்சமாகிய தட்சிணாமூர்த்திக்கு வியாழன்தோறும் விசேஷ வழிபாடுகள், கூட்டு பிரார்த்தனைகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த கோவிலில் செய்ய கூடிய சிவ வழிபாட்டில் அனைவரும் குருவினுடைய மந்திரங்களை சிவாச்சாரியார் சொல்ல, அதை அவ்வாறே பக்தர்களும் திருப்பி சொல்லி வழிபாடு செய்வது விசேஷ அம்சமாகும்.

சகல பிணிகளையும் நீக்க வல்ல ஜ்வரஹர மகாலிங்கம் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அபிஷேகம் :

இவருக்கு பிரதி வாரம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் பால், இளநீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்யும் போது மிளகு கொண்டு சென்று அர்ச்சனை செய்தால் தேகஆரோக்கியம் பெற்றிடலாம். சகல பிணிகளுக்கும் இங்கு பூஜை செய்து தரக்கூடிய மிளகு மிக விசேஷமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து வசதி:

சென்னையில் இருந்து மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்லவும் ரெயில் வசதி உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts