“களவாணி” படம் மூலம் பிரபலமானவர் ஓவியா. அப்படத்துக்கு பின் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. கமலின் “மன்மதன் அம்பு” படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்தது.
கமல் படம் என்பதால் உடனே சம்மதித்தார். அவரை வைத்து நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் படம் ரிலீசான போது அவர் நடித்த பெரும் பகுதி காட்சிகள் இல்லை. வெட்டி நீக்கப்பட்டு இருந்தன. இதனால் ஏமாற்றம் அடைந்தார்.
இதுபற்றி ஓவியா கூறியதாவது:-
மன்மதன் அம்பு படத்தில் நடிக்க அழைத்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டேன். மாதவனின் அத்தைப் பெண் கேரக்டர் என்றனர். கமல், மாதவன், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் உருவானதால் ஆர்வமாக நடித்தேன்.
ஆனால் படம் ரிலீசானதும் அதை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நான் நடித்த நிறைய காட்சிகளை வெட்டி நீக்கி விட்டனர். என் நண்பர்கள் நிறையபேர் ஏன் அந்த படத்தில் நடித்தாய் என கடிந்து கொண்டனர்.
தற்போது ராசு மதுரவன் இயக்கும் “முத்துக்கு முத்தாக” படத்தில் ஓவியா நடித்து வருகிறார். நல்ல கேரக்டர், தமிழ் கற்று வருகிறேன். இயக்குனர் சம்மதித்தால் நானே டப்பிங் பேசுவேன் என்றார்.

0 comments :
Post a Comment