background img

புதிய வரவு

திருவண்ணாமலை மாவட்ட‌‌த்‌தி‌ற்கு மத்திய அரசு விருது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட‌த்‌தினை ‌சிற‌ப்பாக செய‌ல்படு‌த்‌திய திருவண்ணாமலை மாவட்ட‌ம் மத்திய அரசு விருது‌க்கு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழகத்தில் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் 2006-07 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் சிறப்பான செயல்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் தனது பாராட்டினைத் தெரிவித்ததோடு தமிழக செயல்பாட்டு முறையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்டங்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி பாராட்டி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் தமிழகத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக விருதுகள் பெறப்பட்டுள்ளன.

இதேபோன்று, 2009-10ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக அகில இந்திய அளவில் 10 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக திருவண்ணாமலை மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, இத்திட்டத்தில் “பெண்களின் பங்கேற்பு, கிராம அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதும” ஆகிய காரணிகளின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் மத்திய அரசு விருதுக்காகத் தேர்வு செ‌ய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு 82 சத‌‌வீதமாக உள்ளது.

வேலைக்கான ஊதியம் வழங்குவதை முறையாக கண்காணிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் “ஊதியம் வழங்கும் குழ” அமைக்கப்பட்டு இந்தக் குழுவின் முன்னிலையிலேயே பணம் பட்டுவாடா செ‌ய்யப்படுகிறது. இக்குழு வேலை தொடர்ந்து நடைபெறுவதையும், பணம் தொழிலாளர்களுக்கு முறையாக சென்றடைவதையும் கண்காணித்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கான தேசிய அளவிலான விருது நாளை புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், தேசிய ஆலோசனைக் குழு தலைவர் சோனியா காந்தி ஆகியோரால் வழங்கப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் இவ்விருதினைப் பெற்றுக் கொள்கிறார் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts