background img

புதிய வரவு

எனக்கு எதிராக பில்லி சூனியம் : இப்படியும் எடியூரப்பா அச்சம்

மைசூர் : "முதல்வர் பதவியில் இருந்து என்னை வெளியேற்றும் நோக்கில், பில்லி சூனியம் வைக்கும் முயற்சி இன்னும் தொடர்கிறது' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய பகுதியில் முதல் முறையாக, பா.ஜ., ஆட்சியைக் கொண்டு வந்த எடியூரப்பா, 2008ல் முதல்வர் பதவியேற்றார். அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் செய்த "உள்ளடி' வேலைகள் காரணமாக இரண்டு முறை நம்பிக்கை ஓட்டெடுப்பு கொண்டு வரப்பட்டு, அதில் வெற்றியும் பெற்றார். இருந்தாலும், ஆட்சி கையை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் அவரை விட்டபாடில்லை.கடந்தாண்டு அக்டோபரில், கர்நாடக தலைமை செயலகம் முன், அறுபட்ட நிலையில் உள்ள கோழித் தலைகள் மற்றும் தாறுமாறாக சிதறிக் கிடந்த பூஜை பொருட்களாலும் அதிர்ச்சி அடைந்த எடியூரப்பா, "தன்னைக் கொல்ல சதி நடக்கிறது என்றும், எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் எந்த சதிக்கும் நான் பயப்பட மாட்டேன்' என்றும் கூறினார்.அடிக்கடி கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாராள நிதி உதவியும் செய்து வந்தார். சமீபத்தில் கூட, அவர் காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்தார். தொடர்ந்து, நிலபேரம் தொடர்பான ஊழல் புகாரில் சிக்கியவர், பில்லி சூனியம் தான் தன் பிரச்னைகளுக்கு காரணம் என சொல்லி வருகிறார்.

இந்நிலையில், மைசூரில் உள்ள தும்கூர் பகுதியில், நேற்று நடந்த திருமண விழாவில் பங்கேற்ற எடியூரப்பா, நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்றும் விதமாக, எனக்கு எதிராக தொடர் சதி நடக்கிறது. ஏற்கனவே, ஒருமுறை பில்லி சூனியம் வைத்து, தோற்றுப் போனாலும் மீண்டும், மீண்டும் அதற்கான முயற்சியில் எதிர்க் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், விதான் சவுதா (தலைமைச் செயலகம்) சென்றுவிட்டு, உயிரோடு வீடு திரும்ப முடியும் எனும் உறுதி எனக்கு இல்லை. மாநிலத்தில் உள்ள ஆறு கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள என்னையும், எனது பதவியையும் அவமதிக்கும் விதமாக, கவர்னர் பரத்வாஜ் மேற்கொண்டு வரும் பொய்த் தகவல்கள் பற்றி பிரதமருக்கு விரைவில் கடிதம் ஒன்றும் எழுதுவேன்.என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. பா.ஜ., தலைமை எனக்கு முழு ஆதரவு தருகிறது. அதனால், கட்சியில் உள்ளவர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் நான் சொல்வது, எஞ்சிய இரண்டு ஆண்டுகளுக்கும் பா.ஜ., அரசே தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. யாரும் எங்களை ஆட்சியை விட்டு துரத்த முடியாது.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts