background img

புதிய வரவு

ராகுல் காந்தியைச் சந்தித்தார் மணிரத்னம்!!

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார் இயக்குநர் மணி ரத்னம். பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராயும் அவருடன் சென்றிருந்தார்.ன்

சென்னையில் மணிரத்னமும் விவேக் ஓபராயும் இணைந்து துவங்கவிருக்கும் சமூக நல அமைப்பு குறித்து ராகுல் காந்தியுடன் பேசியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து விவேக் ஓபராய் கூறுகையில், ராகுல் காந்தியை ஒரு முக்கிய பணி தொடர்பாக நாங்கள் சந்தித்தோம். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும் சந்திப்பாக இருந்தது. விரைவில் அந்தப் பணி குறித்து அறிவிப்போம், என்றார்.

மணிரத்னத்துக்கு நெருக்கமான ஒருவர் இந்தச் சந்திப்பு குறித்து கூறுகையில், மணி ரத்னம் மீது மிக உயர்ந்த மரியாதை வைத்துள்ளார் ராகுல். அது இந்தச் சந்திப்பில் வெளிப்பட்டது. மணி ரத்னத்தின் சமூகப் பணிக்கு உதவுவதாக ராகுல் தெரிவித்தார், என்றார்.

ராகுலைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு நடிகர் விஜய் பட்ட பாடு நினைவிருக்கலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts