background img

புதிய வரவு

காங்கிரசில் இணைந்ததற்கு எதிர்ப்பு: சிரஞ்சீவி கட்சி அலுவலகம், கொடிகள் தீ வைத்து எரிப்பு; பிரஜாராஜ்ஜியம் தொண்டர்கள் ஆத்திரம்

நடிகர் சிரஞ்சீவி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் அவரது கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் காங்கிரசில் இருந்து ஜெகன்மோகன்ரெட்டி தனியாகப் பிரிந்தபிறகு 2 எம்.எல்.ஏ.க்கள் அவரது பக்கம் சாய்ந்தனர்.

மேலும் அவரது கட்சி நிர்வாகிகள் சிலர் ஜெகன் அணியில் இணைந்தனர். இதனால் அவருக்கு கட்சியை நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் சிரஞ்சீவியை காங்கிரசில் இணைந்து விடுமாறு சோனியா வற்புறுத்தினார். இதை ஏற்று அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். இந்த இணைப்பு விழா விஜய வாடா அல்லது ராஜமுந்திரி நகரில் நடத்த சிரஞ்சீவி திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் மேற்கு கோதாவரி மாவட்டம் சீதம் பேட்டை, கொய்யில் கூடம் ஆகிய இடங்களை சேர்ந்த பிரஜா ராஜ்ஜியம் தொண்டர்கள் சிரஞ்சீவி காங்கிரசில் இணைந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்குள்ள பிரஜாராஜியம் கட்சி அலுவலக்தை தீ வைத்து எரித்தனர். கம்பத்தில் பறந்த அக்கட்சி கொடிகளை இறக்கி தீவைத்து எரித்தனர். பின்னர் சிரஞ்சீவி உருவ பொம்மையை வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று தீ வைத்து எரித்தனர். ஊழலுக்கு துணை போகும் சிரஞ்சீவி ஒழிக என்று கோஷம் போட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரஜாராஜியம் கட்சி தொண்டர்கள் கூறும்போது, சிரஞ்சீவி காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் பரவாயில்லை. அக்கட்சியில் சேர்ந்திருப்பது பெரும் அவமானம். இனி சிரஞ்சீவியால் சுதந்திரமாக செயல்பட முடியாது. அவர் இனி சோனியாகாந்தியின் அடிமையாகத்தான் இருப்பார்.

இதனால் அவரால் ஆந்திர மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை பெற்றுத்தர இயலாது என்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts