background img

புதிய வரவு

பாமகவுடன் கூட்டு சேரும் அணியே வெல்லும், ஆட்சியை பிடிக்கும்-மணி

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த ஆட்சியில் கடைசிக் கூட்டம் என்பதால் மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இறுதி நாளில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசுகையில், நுழைவுத்தேர்வு ரத்து, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி. என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ள இந்த அரசு, பா.ம.கவின் கோரிக்கையையும் நிறைவேற்றியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளாக நியமிக்க 7 பேர் கொண்ட பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவர்கூட வன்னியர் இல்லை. இந்த பரிந்துரையை அரசு செய்ததா?, இல்லையா?. இந்தப் பட்டியலை சரிபார்த்து வன்னியருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க செய்ய வேண்டும்.

விலை உயர்வுக்குக் காரணமான பதுக்கல்காரர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளுடன் போட்டி போட்டு 2வது இடத்தை பா.ம.க பிடித்தது. மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ள பா.ம.கவுடன் சேரும் அணிதான் வெற்றி பெறும். ஆட்சியை பிடிக்கும் என்றார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆட்சியிலும் இறுதி கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் எப்போதுமே உணர்ச்சி மிகுந்ததாக இருக்கும். இந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய அனைத்து உறுப்பினருமே ஆஜராகி விடுவார்கள். சபாநாயகரின் பேச்சும் மனதை உருக்குவதாக இருக்கும்.

ஆனால் சட்டசபையில் நேற்று அப்படி ஒரு நிலமை காணப்படவில்லை. நேரமின்மையை கருத்தில் கொண்டு சபாநாயகர் தனது உரையை நிகழ்த்தாமலேயே, தனது பேச்சை ஆவணங்களில் பதிவு செய்து கொண்டார்.

அதில் ஆவுடைப்பன் கூறியிருப்பதாவது:

13வது சட்டப்பேரவையின் 15 கூட்டத்தொடர்கள் 17.5.06 அன்று தொடங்கி இன்று 10.2.11 வரை நடைபெற்றுள்ளன. இந்த 5 ஆண்டுகளில் சட்டசபை 226 நாட்கள் கூடின. ஒரு நாள் மாலையிலும் கூட்டம் நடந்தது. அவைக்கூட்டம் நடைபெற்ற மொத்தநேரம் 902 மணி 08 நிமிடம்.

அதிமுகவுக்கே அதிக வாய்ப்பு:

மானிய கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும் 123 நாட்கள் நடைபெற்றன. உறுப்பினர்கள் 1,044 பேர் 239 மணி 34 நிமிடம் உரையாற்றினர். இவர்களுக்கு அமைச்சர்கள் பதிலுரையாற்றிய மொத்த நேரம் 109 மணி 48 நிமிடம். முதல்வர் தனது துறைகள் சம்பந்தமாக பதிலளித்த நேரம் 7 மணி 2 நிமிடம். துணை முதல்வர் தனது துறைகள் சம்பந்தமாக 13 மணி 18 நிமிடம் உரையாற்றினார்.

இந்த 5 ஆண்டுகளில் வாதங்களில் பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தி.மு.கவுக்கு 272 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பேசிய நேரம் 65 மணி 15 நிமிடங்கள். அ.தி.மு.கவுக்கு 276 வாய்ப்புகள் வழங்கப்பட்டு, 98 மணி 53 நிமிடங்கள் பேசியுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 312 வாய்ப்புகள் தரப்பட்டு 91 மணி 54 நிமிடங்கள் உடையாற்றினர். பா.ம.க.வுக்கு 191 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு 54 மணி 43 நிமிடங்கள் உரை நிகழ்த்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 156 வாய்ப்புகள், இந்திய கம்ïனிஸ்டு 142 வாய்ப்புகள், ம.தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு 90 வாய்ப்புகள், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 47 வாய்ப்புகள், தே.மு.தி.கவுக்கு 8 வாய்ப்புகள் தரப்பட்டன. தே.மு.தி.க. உறுப்பினர் இந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 1.37 மணிநேரம் சட்டசபையில் பேசி இருக்கிறார்.

அதிக கேள்வி கேட்டவர்கள்:

அனுமதிக்கப்பட்ட கேள்விகள் கேட்டதில் முதல் ஐந்து நிலைகளில், முதலாவதாக கோவை தங்கம் (காங்கிரஸ்) 29 ஆயிரத்து 139 கேள்விகள் கேட்டுள்ளார். அடுத்ததாக ம.குணசேகரன் (அ.தி.மு.க.) 16 ஆயிரத்து57, அ.தமிழரசு (பா.ம.க.) 9,687, கி.ஆறுமுகம் (பா.ம.க.) 5,655, பெ.கண்ணன் (பா.ம.க.) 5,432 கேள்விகள் கேட்டுள்ளனர்.

தவறாமல் அவைக்கு வந்தவர்கள்:

17.5.2006 முதல் 5 ஆண்டுகளில் கூட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களிலும் ஆ.அங்கையற்கண்ணி (தி.மு.க.), எம்.அன்பழகன் (தி.மு.க.), சபா.ராஜேந்திரன் (தி.மு.க.), உதயசூரியன் (தி.மு.க.), கோ.ஐயப்பன் (தி.மு.க.), வே.கண்ணன் (தி.மு.க.), பெ.காமராஜ் (தி.மு.க.), க.சுந்தர் (தி.மு.க.), கே.திருநாவுக்கரசு (தி.மு.க.), வி.எஸ்.பாபு (தி.மு.க.), ப.ரங்கநாதன் (தி.மு.க.), விடியல் எஸ்.சேகர் (காங்கிரஸ்), எஸ். ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்) ஆகியோர் சட்டசபைக்கு வந்திருந்தனர் என்று கூறப்பட்டிருந்தது.

சட்டசபையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும் நிதி அமைச்சருமான க.அன்பழகன் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் சட்டசபை தள்ளி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார். இந்த நிகழ்வுகள் பிற்பகல் 2.27 மணிக்கு முடிந்தன.

சட்டசபை முடிவுக்கு வரும் முன்னரே எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்திருந்தன. எனவே ஆளும் கட்சிக் கூட்டணிக் கட்சியினர் மட்டும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி நன்றியையும் எதிர்கால வெற்றிக்கு வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

சட்டசபையில் இறுதி நிமிடம் வரை முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். நிகழ்ச்சிகள் முடிந்ததும், கருணாநிதியை தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, விடுதலைச் சிறுத்தை கட்சி எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர்.

மதுரை, கோவை மாநகராட்சிகள் விரிவாக்கம் மசோதா நிறைவேற்றம்:

முன்னதாக மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளை அடுத்துள்ள ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து இந்த இரண்டு மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்குவது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts