சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றன. கடந்த மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2-50 உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் நரசிம்மன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், நமக்கு சாதகமான சூழ்நிலை தொடருமானால் அடுத்து வரும் மாதங்களில் பெட்ரோல் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
0 comments :
Post a Comment