நேபாள பிரதமராக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜலநாத் கணல் இன்று பதவியேற்றார்.அதிபர் ராம் பரண் யாதவ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
61 வயதான ஜலநாத் கணல் இதற்கு முன்னதாக நேபாளத்தின் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.
நேபாள பிரதமரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே கடந்த 7 மாதங்களாக சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், ஜலநாத்துக்கு மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment