background img

புதிய வரவு

எங்களுக்கு ஏதாச்சும் நடந்தா ஜெயலலிதா தான் பொறுப்பு: கனிமொழி பேச்சு

திருச்சி: எங்களில் யாருக்கு எது நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பு ஜெயலலிதா தான் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.

திருச்சி மாவட்டம், துறையூரில் திமுக வேட்பாளர் என். பரிமளா தேவியையும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் என். செல்வராஜையும் ஆதரித்து கனிமொழி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

திமுக கூட்டணியில் ஒன்றாகச் சேர்ந்து வெற்றிக்காக பாடுபடுபவர்கள் இணைந்துள்ளனர். ஆனால் அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கே நன்றாகத் தெரியும். கூட்டணி பற்றி முடிவு செய்யும் முன்பே அதிமுக போட்டியிடும் பட்டியல் வெளியானது.

ஜெயலலிதா யாரைம் மதிக்காதவர். இத்தனை ஆண்டுகளாக அவருடன் இருந்த மதிமுகவை தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு வெளியேற்றியவர் ஜெயலலிதா.

அங்கிருந்து வெளியே வந்த பிறகு இன்னும் ஜெயலலிதாவுக்கு ஆணவமும், அகங்காரமும் குறையவில்லை என்கிறார் வைகோ. அவருக்கு எப்பொழுதுமே ஆணவமும், அகங்காரமும் குறையவே குறையாது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.

கலைஞர் கொண்டு வந்த பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. உழவர் சந்தைகளை மூடியவர் ஜெயலலிதா. சத்துணவில் முட்டை போடும் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. இந்த திட்டங்கள் எல்லாம் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்புதான் மீண்டும் செயல்படுத்தப்பட்டன.

தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திருமண உதவித் தொகை ரூ. ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும், ஏழை மக்களின் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

வீட்டுக்கு 4 ஆடுகள் இலவசமாக கொடுத்து அவர்களை மீண்டும் ஆடு மேய்க்கச் சொல்கிறார் ஜெயலலிதா.

வேளாண் இடு பொருள்கள் வீட்டைத் தேடி வரும் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார். சொன்னதைத் தாண்டியும் செய்வார்.

நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். ஆனால் ஜெயலலிதாவோ பொய் உரைகளையும், தவறான பிரசாரத்தையும் செய்கிறார். முதல்வர் கருணாநிதியை இகழ்ந்து பேசுகிறார். மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.

நாகையில் பேசிய ஜெயலலிதா, உடல் நலக் குறைவு என்று சொல்லி கருணாநிதி மருத்துவமனையில் படுத்துக் கொண்டு அனுதாபம் தேட முயற்சிப்பதாக கூறியிருக்கிறார்.

உடல் நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. உடன்பிறப்புகளின் முகத்தை பார்த்தாலே, உடன்பிறப்புகளின் கைத்தட்டலைக் கேட்டாலே உடல் நலக் குறைவு சரியாகிவிடும்.

அடுத்ததாக கனிமொழியை தாக்கிவிட்டு, அனுதாபம் தேட முயற்சிப்பார்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். தந்தையே மகளைத் தாக்குவாரா?

நான் யாரையும் நம்பி இங்கு வரவும் இல்லை, பேசவும் இல்லை. உடன்பிறப்புகளை நம்பித்தான் இங்கே வந்திருக்கிறேன். இந்த உடன்பிறப்புகளைத் தாண்டி தாக்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

எங்களில் யாருக்கு எது நடந்தாலும் அதற்கு காரணம் ஜெயலலிதா தான் என்றார்.

பெண்கள் முன்னேற்த்தில் அக்கறை கொண்ட கருணாநிதி:

திமுக ஆட்சியில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

திருச்சியில் நடந்த விழா ஒன்றில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

அப்போது கனிமொழி பேசியதாவது,

தமிழகத்தில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூட பயந்த காலம் உண்டு. அந்த நிலைமையை மாற்றி பெண்களை தைரியமாக நடமாடச் செய்தவர் கருணாநிதி. அவர் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்க சட்டம் கொண்டு வந்தார். தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திருமண உதவித்தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரமாகவும், கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளார்.

இது தவிர மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4 லட்சம் கடனில் ரூ.2 லட்சம் மானியம் தரப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஏற்கனவே மகளிர் சுயஉதவிக்குழுகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார் நம் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். திமுக ஆட்சியில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.

திருமண உதவி திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற பெண்கள் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்றார். தேர்தல் அறிக்கையில் இதை 8-ம் வகுப்பாக குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால் முதல்வர் பெண்கள் கட்டாயம் 10-ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். அவருக்கு பெண்கள் முன்னேற்றத்தில் தனி அக்கறை உண்டு என்றார்.

கேட்ச்”களை தவறவிட்டதால் தோல்வி அடைந்தோம்: பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் -அப்ரிடி

உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வி அடைவது நீடித்து வருகிறது. ஏற்கனவே 4 முறை தோல்வி அடைந்து இருந்தது. மொகாலியில் நேற்று நடந்த அரை இறுதியில் பாகிஸ்தான் அணி 29 ரன்னில் இந்தியாவிடம் தோற்றது. 5-வது முறையாக அந்த அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி கூறியதாவது:-

கேட்ச்களை தவறவிட்டதே தோல்விக்கு முக்கிய காரணம். எங்களைவிட இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். எங்கள் அணியின் எந்த ஒரு ஜோடியும் நிலைத்து நின்று ஆடவில்லை.

விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. வகாப் ரியாஸ் சிறப்பாக பந்து வீசினார். உமர்குல் பந்து வீச்சு சரியாக அமையவில்லை. எந்த ஒரு நபருக்கும் மோசமான நாள் அமையலாம். இந்தியாவுடன் மோதும் அரை இறுதி போட்டியை பாகிஸ்தானில் அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த தோல்விக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

கூட்டு முயற்சியால் வெற்றி: இளம் வீரர்களுக்கு தெண்டுல்கர் வழிகாட்டி; டோனி பாராட்டு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட அரை இறுதிப்போட்டியில் இந்தியா 29 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்தது. தெண்டுல்கர் 85 ரன்னும், ஷேவாக் 25 பந்தில் 38 ரன்னும், ரெய்னா 36 ரன்னும் எடுத்தனர். வகாப் ரியாஸ் 5 விக்கெட்டுகள், அஜ்மல் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 49.5 ஓவரில் 231 ரன்னில் “ஆல்-அவுட்” ஆனது. ஜாகீர்கான், நெக்ரா, முனாப்பட்டேல், ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 260 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் தான். ஆனால் மிகவும் கவனமுடன் விளையாடினோம். பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீச்சினார்கள். பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடுவார்கள் என்று கருதியும், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கருதிதான் அஸ்வினை நீக்கிவிட்டு 3-வது வேகப்பந்து வீரரை சேர்த்தேன்.

ஆடுகளம் குறித்து நான் கணித்தது தவறானது. சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் பந்து திரும்பியது. ஆனாலும் எங்களது வேகப்பந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். நெக்ரா, ஜாகீர்கான், முனாப்பட்டேல் நன்றாக வீசினார்கள். இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தெண்டுல்கரின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. இளம் வீரர்களுக்கு அவர் உதவியாக உள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் சிறப்பாக விளையாடுவார். அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு தெண்டுல்கர் மிக சிறந்த வழிகாட்டி. ஆசிஷ் நெக்ரா குறித்து விமர்சிக்கப்பட்டது. இது கிரிக்கெட்டின் ஒரு பகுதி. ஆனால் அவர் சிறப்பாக பந்து வீசியதை அனைவரும் பார்த்து இருப்பார்கள்.

ரெய்னாவின் 36 ரன் என்பது மிகவும் சிறப்பானது. 50 ஓவர் வரை ஆடியது முக்கியமானது. இதற்கு ரெய்னா தான் காரணம். பேட்டிங்கில் பவர்பிளேயில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அணியில் தனிப்பட்டவர்களின் செயல்பாடு இருக்கும். ஆனால் ஒவ்வொரு வரும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்தனர். ஒவ்வொரு வரும் அணியின் வெற்றிக்காகவே ஆடுகிறார்கள். வீரர்களின் கூட்டு முயற்சியால் தான் வெற்றி பெற்றோம். இறுதிப்போட்டியில் இலங்கையை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு டோனி கூறினார்.

ஆந்திராவில் கடப்பா எம்.பி. தொகுதிக்கு மே 8-ந்தேதி தேர்தல்; ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் போட்டி

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மனைவி விஜயலட்சுமி மகன் ஜெகன் மோகன் ரெட்டி. காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதி எம்.பி. பதவியையும், விஜயலட்சுமி புலிவெந்துலா தொகுதி எம்.எல். ஏ. பதவியையும் ராஜினா செய்தனர்.

இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 8-ந்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடப்பா எம்.பி. தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும் புலிவெந்துலா சட்டசபை தொகுதிக்கு விஜயலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

விரைவில் இருவரும் வேட்புமனுதாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்.எஸ்.விவே கானந்தா ரெட்டி தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அவரது எம்.எல்.எல்.சி. பதவி காலம் முடிந்ததால் ராஜினாமா செய்தார்.

அவரை புலிவெந்துலா தொகுதியில் நிறுத்தி ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுபற்றி விவேகானந்தா கூறும்போது, காங்கிரஸ் மேலிடம் கட்டளையிட்டால் நான் எந்த தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்றார்.

இந்திய மக்கள் தொகை 121.2 கோடி!-கல்வியறிவு பெற்றோர் 74%

டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் தோராயமான விவரங்களை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,

இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாகும்.

2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது. இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.

2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது.

இப்போதைய இந்திய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைகளைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் மிக அதிகமான அளவில் மக்கள் வசிக்கின்றனர். அடுத்த நிலையில் மகாராஷ்டிரம் (11.23 கோடி), பிகார் (10.38 கோடி), மேற்கு வங்கம் (9.13 கோடி), ஆந்திரப் பிரதேசம் (8.46 கோடி) ஆகியவை உள்ளன.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மக்கள் தொகையைக் கூட்டினால் அது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த விகிதாச்சாரம் இவ்வளவு மிக மிகக் குறைவான அளவைத் தொட்டது இதுவே முதல் முறை. இது பெரும் கவலை தரும் விஷயமாகும்.

கேரளத்தில் மட்டுமே 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1084 பெண் குழந்தைகள் என்ற நிலைமை உள்ளது. அதே போல புதுச்சேரியிலும் 1038 பெண் குழந்தைகள் என்ற நல்ல சூழல் நிலவுகிறது.

ஆனால் டைமன் டையு யூனியன் பிரதேசத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 618 பெண் குழந்தைகளே உள்ளனர். அதே நேரத்தல் தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், மிசோரம், அந்தமான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்-பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் நல்ல நிலையை எட்டி வருகிறது. மற்ற 27 மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகை நெருக்கம் டெல்லியின் வட கிழக்குக் பகுதியில் தான் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 37,346 பேர் வசிக்கின்றனர்.

அருணாசலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். நாட்டிலேயே மிக மிகக் குறைவான மக்கள் நெருக்கம் உள்ள பகுதி இது தான். டெல்லிக்கு அடுத்தபடியாக சண்டீகரில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ளது.

தாதர், நகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தான் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிக அளவாக 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நாகாலாந்தில் மிக மிகக் குறைவான அளவிலேயே மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது.

கல்வியறியைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74.04 சதவீதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் இது 64.83 சதவீதமாகவே இருந்தது. பத்தாண்டுகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் ஆண்களிடையே கல்வியறிவு 82.14 சதவீதமாகவும், பெண்களிடையே கல்வியறிவு 65.46 சதவீதமாகவும் உள்ளது.

இன்றைய நிலையில் உலக மக்கள் தொகையில் 19.4 சதவீதம் பேர் சீனாவிலும் 17.5 சதவீதம் பேர் இந்தியாவிலும் வசிக்கின்றனர்.

1872ம் ஆண்டில் தான் நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பான சென்ஸஸ் நடத்தப்பட்டது. இப்போது நடத்தப்பட்டுள்ளது 15வது கணக்கெடுப்பாகும்.

இந்தியா-இலங்கை இறுதிப் போட்டியை காண மும்பை வரும் ராஜபக்சே!

மும்பை: மும்பையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இந்தியா-இலங்கை இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார்.

மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இதையடுத்து கிலானி நேற்று மொகாலி வந்து போட்டியை மன்மோகனுடன் இணைந்து ரசித்தார்.

மேலும் இரு தலைவர்களும் சிறிது நேரம், இரு நாட்டு விவகாரங்கள் குறித்தும் பேசினர். கிலானிக்கு மன்மோகன் சிறப்பு விருந்தும் அளித்தார்.

இந் நிலையில் இந்தியாவுடன் தனது நாட்டு அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதையடுத்து இதைக் காண மும்பை வர முடிவு செய்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இதற்கான அனுமதியையும் தன்னுடன் வரும் 30 பேருக்கு சிறப்பு இருக்கைகளையும் கோரியுள்ளார் ராஜபக்சே.

அதே போல வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனாவையும் போட்டியைக் காண வருமாறு இந்தியா அழைத்துள்ளது.
Read: In English
இவர்களது வருகையையொட்டி மும்பையில் கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

இந் நிலையில் இறுதிப் போட்டியைக் காண ஏராளமான இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மும்பைக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அந் நாட்டு விமானத்துறை மும்பைக்கு கூடுதல் விமானங்களை இயக்கவுள்ளது.

அரசு உணவு குடோனில் இருந்து 1 லட்சம் கோதுமை மூட்டை மாயம்

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் அரசுக்கு சொந்தமான மார்க்கெட்டிங் பெடரேசன் உணவு குடோன் உள்ளது. இங்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான கோதுமைகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 30 லட்சம் கோதுமைகள் மூட்டை இருந்தன.

இந்த குடோனை தனியார் நிறுவனம் ஒன்று பராமரித்து வந்தது. அரசு அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் அங்கு இருக்கும் கோதுமை மூட்டைகள் சரியான அளவில் இருக்கிறதா என்று அதிகாரிகள் கண்கெடுப்பு நடத்தினார்கள்.

அப்போது 30 லட்சம் மூட்டைகளுக்கு பதில் 29 லட்சம் மூட்டைகளே இருந்தன. 1 லட்சம் மூட்டைகளை காணவில்லை. இவை எப்படி மாயமானது என்று தெரியவில்லை. இது பற்றி குடோனை பராமரித்து வந்த நிறுவனம் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் விஜய் டிவி இசை இரவு... விக்ரம்- சினேகா பங்கேற்பு!

துபாயில் விஜய் டிவி நடத்தும் இசை இரவு நிகழ்ச்சியில் நடிகை சினேகா, நடிகர் விக்ரம் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

விஜய் டிவியின் அலுவலகம் ஒன்றும் துபாயில் திறக்கப்பட உள்ளது. அதையொட்டியே இந்த இசை நிகழ்ச்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த இசை நிகழ்ச்சியில் நடிகைகள் சந்தியா, பூர்ணா, சோனா கான், பாடகர் சங்கர் மகாதேவன், சீனிவாஸ், சின்மயி, ஹரிசரண், சுச்சி, சிவகார்த்திகேயன், கோபிநாத், வேல்முருகன் மற்றும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் நடனக் கலைஞர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

ஏப்ரல் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் யுஏஇ தமிழ்ச் சங்கத்தில் கிடைக்கின்றன. மேலும் விவரங்களுக்கு +971 50 5865375, +971 50 4751352, +97150 5866027 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

வரிசையா நிக்க வச்சு நாலு குத்து குத்தி மகாராஜா ஆக்கி விடு-விஜயகாந்த்துக்கு வடிவேலு 'ஐடியா'!

சென்னை: நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன் என்று விஜயகாந்த்தை காட்டமாக கேட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.அன்பழகனை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், பொது இடத்தில வச்சு தன்னோட தப்பை சுட்டிக் காட்டிய வேட்பாளரை நங்கு நங்குன்னு குத்துறியே. கேட்டா, என்கிட்ட குத்து வாங்கினா மகாராஜா ஆகிடுவான்னு சொல்ற. நான் சொல்றேன், பேசாம உன் கட்சிக்காரங்களை உன்னோட கல்யாண மண்டபத்துக்கு வர வச்சு வரிசையா நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து குத்து. எல்லாத்தையும் மகாராஜா ஆக்கி விட்டுப் போ.

அப்புறம் எதுக்குடா எலக்ஷனு. பேசாம கூட்டணிய கலைச்சுடு. பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா.

இஸ்லாமியப் பெருமக்களை தனது படங்களில் தீவிரவாதிகளாகத்தான் காட்டுவார் விஜயகாந்த். தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்வார். இஸ்லாமியர்கள் மீது பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்ளும் அவர் தேர்தலில் மட்டும் ஏன் உரிய வகையில் சீட் கொடுக்கவில்லை.

தன்னோட கட்சி சார்பா போட்டியிடும் 41 வேட்பாளர்கள் பெயரையும், ஒரு பெயர் விடாம சரியா சொல்லட்டும் விஜயகாந்த். நான் இந்த பிரசாரத்தை விட்டே போய்டுறேங்க என்றார் வடிவேலு.

புதன்கிரகத்தை படம் பிடித்த “நாசா” விண்கலம்

புதன் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளிமையம் “மெசஞ்சர்” என்ற விண்கலத்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பியது. சூரிய குடும்பத்தில் மிக தொலைவில் உள்ள இந்த கிரகத்தை கடந்த 17-ந் தேதி இந்த விண்கலம் சென்றடைந்தது. தற்போது இந்த விண்கலம் புதன் கிரகம் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அது தனது ஆய்வு பணியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தின் மேற்பரப்பை முதன் முறையாக போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. இதன் மேல் பகுதி மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வழக்கத்துக்கு மாறாக உள்ளது.

அதில் இருள் மயமான கதிர் வீச்சு காணப்படுகிறது. அது “டெபுசி” என்று அழைக்கப்படுகிறது. அவற்றின் கீழ் பகுதியும் இதற்கு முன்பு பார்க்காத அளவில் வித்தியாசமாக உள்ளது. இந்த தகவலை நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

இந்த படம் உள்பட மொத்தம் 363 போட்டோக்களை எடுத்து “மெசஞ்சர்” விண்கலம் அனுப்பியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்த பிறகு படிப்படியாக அவை வெளியிடப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

12 வயதில் குழந்தை பெற்ற பள்ளி சிறுமி

நெதர்லாந்தில் உள்ள குரோனிங் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி தனது தோழிகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அந்த வலியுடன் அவள் பள்ளியை சென்றடைந்தாள்.

உடனே பள்ளி கண்காணிப்பாளர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றார். அவளை பரிசோதித்த டாக்டர்கள் அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தை பெறுவதற்காக பிரசவ வலி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட அவள் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். தற்போது அவளும், குழந்தையும் நலமாக உள்ளனர். அச்சிறுமி கர்ப்பிணி போன்று தோற்றமளிக்கவில்லை. சாதாரண சிறுமி போன்றே காட்சி அளித்தாள். தான் கர்ப்பம் அடைந்தது எப்படி என்று அவளுக்கே தெரியவில்லை. யாராவது அவளை ஏமாற்றி கற்பழித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

காமெடி பீஸ்! - வடிவேலுவை தாக்கும் விந்தியா

சென்னை: காமெடி பீஸ் வடிவேலு, விரைவில் அரசியலில் அடிவாங்கப் போகிறார் என்றார் நடிகை விந்தியா.

நடிகை விந்தியா அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சித்து வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அவர் பிரச்சாரம் அமைந்ததது.

தனது பிரச்சாரத்தின்போது விந்தியா பேசுகையில், "வடிவேலு ஒரு காமெடி பீஸ். அவரால திமுகவும் இப்போ காமெடி பீஸா தெரியுது.

திமுககிட்ட எவ்வளவு வாங்குனாரோ தெரியல. வாங்குனதுக்கு வஞ்சமில்லாம பேசிக்கிட்டு திரியறாரு. இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக் கட்டுவாராம். இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல்லைங்க. சினிமாவில கூட இந்த மாதிரி காமெடியை நான் பார்த்ததில்லை.

மக்களுக்கு நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன். கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். பொதுவா சினிமாவில் வடிவேலு அடி வாங்கி அடி வாங்கித்தான் காமெடி பண்ணூவார். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல.

இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு," என்றார்.

விஜயகாந்த்தை அதிமுக கூட்டணி கட்சியினரே நம்பவில்லை-திருமா

அரூர்: ஆயிரக்கணக்கானோர் மத்தியில் வேட்பாளரை அடித்து உதைக்கும் விஜயகாந்த் வெற்றி பெற்றார் நாடு என்ன ஆகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவவன் கேள்வி எழுப்பினார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் சமூகத்தில் பின்தங்கிய, ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாமக ஓரணியில் உள்ளதால் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

எந்தக் கட்சி தலைவராவது சொந்த கட்சி வேட்பளாரை பொது இடத்தில் தாக்குவார்களா?. வேட்பாளர் என்ன சொன்னார், பெயரை தப்பா சொல்லாதையா என்று சொன்னார். பெயரை பாண்டியன் பாண்டியன் என்று சொல்லாதையா. பாஸ்கர் என்று சொல்லுயா என்று வேட்பாளர் சொல்லுகிறார்.

என்னையே எதிர்த்து பேசுகிறாயா, உங்க அப்பா உனக்கு பாஸ்கர் என பெயர் வைத்திருக்கலாம். நான் பாண்டியன் என்றுதான் கூப்பிடுவேன் என்று சொல்லி விஜய்காந்த் தாக்கியுள்ளார்.

இவரைப் போன்றவர் எல்லாம் வென்றால், ஆட்சிக்கு வந்தால் நாடு என்ன ஆகும் என்றார்.

பின்னர் மேட்டூரில் நிருபர்களிடம் பேசிய திருமா, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகள் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்திருப்பது திமுக கூட்டணிக்கு வலுசேர்த்துள்ளது.

நடிகர் விஜயகாந்த்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவரது மதிப்பை குறைத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ளவர்களே விஜயகாந்த்தை நம்புவதில்லை என்றார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கருணாநிதி செய்தது என்ன?-ஜெ. கேள்வி

விழுப்புரம்: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கருணாநிதியும், திமுக அரசும் என்ன செய்தனர் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். வழக்கமாக எழுதி வைத்து படித்து வரும் அவர், நேற்றும் அதுபோலவே படித்தார். இருப்பினும் நேற்று நிறைய புதிய விஷயங்கள் அவரது பிரசாரப் பேச்சில் இடம் பெற்றிருந்தது.

விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் இருந்தபடி அவர் வேனில் அமர்ந்து பேசியதாவது:

இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்துக்காக நடைபெறும் சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்களாகிய உங்களின் விடுதலைக்காக நடைபெறும் தேர்தல். அடிமைத்தனத்தில் இருந்து தமிழக மக்களாகிய உங்களை விடுவிப்பதற்காக நடைபெறும் தேர்தல்.

5 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருந்தீர்கள். குறிப்பாக விலைவாசி பிரச்சினையால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா? இல்லை. 15 ரூபாய்க்கு விற்ற அரிசி இன்று 42 ரூபாய்க்கு விற்கிறது, 13 ரூபாய்க்கு விற்ற சர்க்கரை இன்று 33 ரூபாய்க்கு விற்கிறது. 28 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு இன்று 90 ரூபாய்க்கு விற்கிறது. 35 ரூபாய்க்கு விற்ற புளி இன்று 110 ரூபாய்க்கு விற்கிறது. 38 ரூபாய்க்கு விற்ற பூண்டு 250 ரூபாய்க்கு விற்கிறது.

மணல் கொள்ளை இன்றும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. 2,500 ரூபாய்க்கு விற்ற ஒரு லோடு மணல் இன்று 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது.

தி.மு.க. ஆட்சி வந்ததில் இருந்து மின் உற்பத்தி பெரு வில்லை. மின் வெட்டு தான் பெருகி இருக்கிறது. இதனால் அன்றைக்கு மிகுமின் மாநிலமாக இருந்த தமிழகம் இன்றைக்கு மின்பற்றாக்குறை மாநிலமாக திகழ்கிறது. இதனால் தொழில்கள் முடங்கி, உற்பத்தி குறைந்து விட்டதால் தமிழகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது.

தமிழகத்தின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பெருகி விட்டது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புகழ் பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்கியது. ஆனால் இந்த 5 ஆண்டுகளில் தமிழகம் தலைகுனிவை சந்தித்து உள்ளது.

தமிழகத்தின் எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கை நன்றாக அமைய ஒவ்வொரு வாக்காளர்களும் விழிப்புடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்களும் வீட்டை விட்டு வெளியே வந்து ஜனநாயக உரிமையை காத்திட வேண்டும்.

கழக ஆட்சி அமைந்த உடன் விழுப்புரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றப்படும். அரைகுறையாக விடப்பட்டு உள்ள பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக்கப்படும். கோலியனூர் ஒன்றியத்தில் சாலைவசதிகள் மேம்படுத்தப்பட்டு போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.

வளவனூரில் பேருந்து நிலையம் கொண்டு வரப்படும். மீனவர்களின் நலன்பாதுகாக்கப்படும். புதிய பஸ் நிலையத்தில் மழை காலத்தில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மயிலம், வானூர், திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி தொகுதிகளின் பிரச்சினைகளையும் நன்கு அறிவேன். அவற்றுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க. ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. ஒவ்வொரு வாக்காளரும் வீட்டைவிட்டு வெளியே வந்து அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்.

பொன்முடி கொட்டத்தை அடக்க வேண்டும்

தமிழகத்தின் எதிர்காலம் பிரகாசமாகவும், எழுச்சியாகவும் அமைய நீங்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தின் பிரச்னைகள் போல் இந்தத் தொகுதியின் மிகப்பெரிய பிரச்னை பொன்முடிதான். அவரின் அட்டகாசத்தையும், கொட்டத்தையும் நீங்கள் அடக்க வேண்டும்.

அரசுத் திட்டங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. கபட நாடகம் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை வெளியிடச் செய்யவில்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற முடியவில்லை. பாலாறு குறுக்கே அணை கட்டுவதைத் தடுக்க முடியவில்லை.

மீனவர்கள் படுகொலையைத் தடுக்கவில்லை. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தலித் மக்கள், அரசு ஊழியர்கள் தாக்கப்படுகிறார்கள்.

கருணாநிதி குடும்பம் பறித்த சொத்துக்களை மீட்போம்

விவசாய நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட் தொழில், சினிமாத் துறை ஆகியவை அவர்கள் கையில் சிக்கியுள்ளன.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கிய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடமே திருப்பி வழங்கப்படும்.

அ.தி.மு.க. ஆட்சியில் சிறந்து விளங்கிய தமிழகம், இப்போது பரிகாசத்துக்கு ஆளாகியுள்ளது. தமிழக மக்கள் அவர்களை விரட்டியடிக்க வேண்டும். அதற்கு ஒரே வாய்ப்பு தேர்தல்தான் என்று அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் "போர்: இந்தியா "சூப்பர் வெற்றி! * பாகிஸ்தானை தோற்கடித்து பைனலில் நுழைந்தது

மொகாலி: உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
அஷ்வின் நீக்கம்:
ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, நெஹ்ரா இடம் பெற்றார். பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அக்தருக்கு இம்முறையும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங் தேர்வு செய்தார்.
சேவக் "சரவெடி:
இந்திய அணிக்கு வழக்கம் போல் சேவக் அதிரடி துவக்கம் தந்தார். குல் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரியு அடித்தார். இவரது அடுத்த ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் எடுக்கப்பட, குல்லை பார்க்கவே பாவமாக இருந்தது. அப்துர் ரசாக் ஓவரில் சச்சின், சேவக் தலா ஒரு பவுண்டரி அடிக்க, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தொடர்ந்து குல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த சேவக்கின் சரவெடி ஆட்டம் நீண்ட நேரம் தொடர வேண்டும் என ரசிகர்கள் ஏங்கினர். ஆனால், வகாப் ரியாஸ் சிக்கலை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் "ரிவியு முறையில் சேவக் 38 ரன்களுக்கு(9 பவுண்டரி) அவுட்டானார்.
வகாப் மிரட்டல்:
அடுத்து வந்த காம்பிர் "கம்பெனி கொடுக்க, சச்சின் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். முகமது ஹபீஸ் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பிர்(27), கம்ரான் அக்மலின் துல்லிய "ஸ்டம்பிங்கில் வீழ்ந்தார். போட்டியின் 26வது ஓவரை வீசிய வகாப் ரியாஸ் இரட்டை "அடி கொடுக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ந்து போயினர். 2வது பந்தில் விராத் கோஹ்லியை(9) வெளியேற்றினார். 3வது பந்தில் யுவராஜ் சிங்கை(0) போல்டாக்க, மொகாலி அரங்கமே அமைதியானது. அப்போது இந்திய அணி நான்கு விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து திணறியது. அடுத்து வந்த தோனி தடுத்து ஆட, ரியாசின் "ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது.
சச்சின் அபாரம்:
இதற்கு பின் சச்சின், தோனி இணைந்து நிதானமாக ஆடினர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தால், ஸ்கோர் விரைவாக உயரவில்லை. ஒரு நாள் போட்டிகளில் தனது 95வது அரைசதம் அடித்த சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதம் அடிக்க தவறினார். இவர் 85 ரன்களுக்கு(11 பவுண்டரி) சயீத் அஜ்மல் சுழலில் வீழ்ந்தார். வகாப் ரியாஸ் "வேகத்தில் தோனியும்(25) நடையை கட்டினார்.
ரெய்னா அசத்தல்:
கடைசி கட்டத்தில் "பேட்டிங் பவர்பிளேயை பயன்படுத்தி சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். <உமர் குல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். ஹர்பஜன் 12 ரன்கள் எடுத்தார். ஜாகிர் கானை(9) வெளியேற்றிய வகாப் ரியாஸ், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நெஹ்ரா(1) ரன் அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது.
திணறல் ஆட்டம்:
சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. ஜாகிர் கான் பந்தில் கம்ரான் அக்மல்(19) காலியானார். ஓரளவுக்கு தாக்குப்படித்த ஹபீஸ் 43 ரன்களுக்கு முனாப் வேகத்தில் அவுட்டானார். மீண்டும் ஒரு முறை சுழலில் மிரட்டிய யுவராஜ் சிங், அசாத் ஷபிக்(30), அனுபவ யூனிஸ் கானை(13) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் யுவராஜ் சிங் பந்துவீச்சில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் உமர் அக்மல். இவர், ஹர்பஜன் வலையில் 29 ரன்களுக்கு அவுட்டானார். முனாப் பந்தில் அப்துல் ரசாக்(3) வெளியேற, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
அப்ரிதி ஏமாற்றம்:
கடைசி கட்டத்தில் கேப்டன் அப்ரிதி, மிஸ்பா -உல்-ஹக் இணைந்து போராடினர். இதில், மிஸ்பா "ஆமை வேகத்தில் ஆட, "ரன் ரேட் எகிறியது. இந்த பதட்டத்தில் ஹர்பஜன் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்ற அப்ரிதி(19), பரிதாபமாக அவுட்டாக, பைனல் கனவு முடிவை நெருங்கியது.
தாமதம் ஏன்?:
"பேட்டிங் பவர்பிளேயை மிகவும் தாமதமாக 46வது ஓவரில் பாகிஸ்தான் எடுத்தது வியப்பை தந்தது. அப்ரிதி போன்ற அதிரடி வீரர்கள் களத்தில் இருக்கும் போன் ஏன் "பவர்பிளேயை பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பச் செய்தது. நெஹ்ரா வேகத்தில் ரியாஸ்(8), குல்(2) பெவிலியன் திரும்பினர். போராடிய மிஸ்பா அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இவர் 56 ரன்களுக்கு வெளியேற, பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறியது. ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.
அபார வெற்றி பெற்ற இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. வரும் ஏப்., 2ம் தேதி மும்பையில் நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஸ்கோர் போர்டு
இந்தியா
சேவக்-எல்.பி.டபிள்யு.,(ப)ரியாஸ் 38(25)
சச்சின்(கே)அப்ரிதி(ப)அஜ்மல் 85(115)
காம்பிர்(ஸ்டம்)கம்ரான்(ப)ஹபீஸ் 27(32)
கோஹ்லி(கே)உமர்(ப)ரியாஸ் 9(21)
யுவராஜ்(ப)ரியாஸ் 0(1)
தோனி-எல்.பி.டபிள்யு.,(ப)ரியாஸ் 25(42)
ரெய்னா--அவுட்இல்லை- 36(39)
ஹர்பஜன்(ஸ்டம்)கம்ரான்(ப)அஜ்மல் 12(15)
ஜாகிர்(கே)கம்ரான்(ப)ரியாஸ் 9(10)
நெஹ்ரா--ரன்அவுட்-(ரியாஸ்/கம்ரான்) 1(2)
முனாப்-அவுட்இல்லை- 0(0)
உதிரிகள் 18
மொத்தம் (50 ஓவரில், 9 விக்.,) 260
விக்கெட் வீழ்ச்சி: 1-48(சேவக்), 2-116(காம்பிர்), 3-141(கோஹ்லி), 4-141(யுவராஜ்), 5-187(சச்சின்), 6-205(தோனி), 7-236(ஹர்பஜன்), 8-256(ஜாகிர்), 9-258(நெஹ்ரா).
பந்துவீச்சு: உமர்குல் 8-0-69-0, ரசாக் 2-0-14-0, ரியாஸ் 10-0-46-5, அஜ்மல் 10-0-44-2, அப்ரிதி 10-0-45-0, ஹபீஸ் 10-0-34-1.
பாகிஸ்தான்
கம்ரான்(கே)யுவராஜ்(ப)ஜாகிர் 19(21)
ஹபீஸ்(கே)தோனி(ப)முனாப் 43(59)
ஷபிக்(ப)யுவராஜ் 30(39)
யூனிஸ்(கே)ரெய்னா(ப)யுவராஜ் 13(32)
மிஸ்பா(கே)கோஹ்லி(ப)ஜாகிர் 56(76)
உமர்(ப)ஹர்பஜன் 29(24) -
ரசாக்(ப)முனாப் 3(9)
அப்ரிதி(கே)சேவக்(ப)ஹர்பஜன் 19(17)
ரியாஸ்(கே)சச்சின்(ப)நெஹ்ரா 8(14)
உமர்குல்-எல்.பி.டபிள்யு.,(ப)நெஹ்ரா 2(3)
அஜ்மல்-அவுட்இல்லை- 1(5)
உதிரிகள் 8
மொத்தம் (49.5 ஓவரில், "ஆல்-அவுட்) 231
விக்கெட் வீழ்ச்சி: 1-44(கம்ரான்), 2-70(ஹபீஸ்), 3-103(ஷபிக்), 4-106(யூனிஸ்), 5-142(உமர்), 6-150(ரசாக்), 7-184(அப்ரிதி), 8-199(ரியாஸ்), 9-208(உமர்குல்), 10-231(மிஸ்பா).
பந்துவீச்சு: ஜாகிர் 9.5-0-58-2, நெஹ்ரா 10-0-33-2, முனாப் 10-1-40-2, ஹர்பஜன் 10-0-43-2, யுவராஜ் 10-1-57-2.
"லக்கி சச்சின்
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பக்கம் நேற்று அதிர்ஷ்டக் காற்று அதிகமாக வீசியது. 6 முறை கண்டம் தப்பிய இவர், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதன் விபரம்...
* 11வது ஓவரில் சயீத் அஜ்மல் வீசிய 4வது பந்தில் சச்சினுக்கு(23 ரன்), அம்பயர் இயான் கோல்டு எல்.பி.டபிள்யு., கொடுத்தார். இதனை எதிர்த்து அம்பயர் தீர்ப்பு மறுபரீசிலனை(யு.டி.ஆர்.எஸ்.,) முறையில் சச்சின் "அப்பீல் செய்தார். "டிவி ரீப்ளேவில் பந்து "லெக் திசையில் செல்வது உறுதி செய்யப்பட, "அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். டி.ஆர்.எஸ்., வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வந்த சச்சின், தற்போது அதே முறையில் பலன் அடைந்துள்ளார்.
* 11வது ஓவரின் 5வது பந்தில் கம்ரான் அக்மல் "ஸ்டம்பிங் செய்தார். "ரீப்ளேவில் சச்சின்(23 ரன்) கால் "கிரீசில் இருந்தது உறுதியாக, ஆட்டத்தை தொடர்ந்தார்.
* 14வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(27 ரன்) கொடுத்த எளிய "கேட்ச் வாய்ப்பை மிஸ்பா கோட்டை விட்டார்.
* 20வது ஓவரில் மீண்டும் அப்ரிதி பந்தில் சச்சின்(45 ரன்) அடித்த பந்தை யூனிஸ் கான் தவற விட்டார்.
* 30வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(70 ரன்கள்) கொடுத்த கடின "கேட்ச்சை கம்ரான் அக்மல் பிடிக்க தவறினார்.
* 35வது ஓவரில் ஹபீஸ் பந்தில் சச்சின்(81 ரன்கள்) அடித்த பந்தை உமர் அக்மல் கோட்டை விட்டார்.
அப்ரிதி பந்துவீச்சில் மட்டும் மூன்று முறை சச்சின் தந்த "கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் நழுவ விட்டனர். ஆனால், சயீத் அஜ்மல் பந்தில் சச்சின் தந்த "கேட்ச்சை அப்ரிதி "சூப்பராக பிடித்து சச்சினின்(85 ரன்கள்) அதிர்ஷ்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிரதமர்கள்-வீரர்கள் அறிமுகம்
நேற்று இரு நாடுகளின் தேசிய கீதம் இசைத்து முடித்தபின், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி இருவரும், மைதானத்தில் இருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்தினர். பாகிஸ்தான் வீரர்களை அப்ரிதியும், இந்திய வீரர்களை கேப்டன் தோனியும், இரண்டு பிரதமர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
---
அரசு விடுமுறை
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியை, வீட்டில் இருந்து கண்டுகளிக்க வசதியாக, நேற்று பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரைநாள் விடுப்பு வழங்கியது. இதைப் பின்பற்றிய மத்தியபிரதேசம், டில்லி அரசும் தங்கள் ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு கொடுத்தன. இதுகுறித்து டில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில்,"" பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியை காண, மதியம் முதல் விடுமுறை கொடுக்கப்படுகிறது, என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல, பாகிஸ்தானில் நேற்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
---
சேவக், தோனி "1000
நேற்றைய அரையிறுதி போட்டியில் சேவக் (1,036), இந்திய அணி கேப்டன் தோனி (1,001) ஆகியோர், பாகிஸ்தானுக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினர். இதற்கு முன் சச்சின் (2,489), அசார் (1,657), டிராவிட் (1,652), கங்குலி (1,652), யுவராஜ் சிங் (1,251) ஆகியோர் ஆயிரம் ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளனர்.
--
"டாஸ் ஏலம்
பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி போட்டியில், "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். இதற்கு பயன்படுத்திய நாணயத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஏலம் விட முன்வந்துள்ளது.
--
"கரண்ட் கட் இல்லை
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியை காண வசதியாக, தமிழகத்தில் நேற்று மின்வெட்டு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக அதிகமுறை "மின்வெட்டு மூலம் "ஷாக் தந்தனர். அதேநேரம் மகாராஷ்டிரா அரசு, வெளிமாநிலங்களில் இருந்து கூடுதலாக 1000 "மெகா வாட் மின்சாரத்தை பெற்று, மதியம் 2 முதல் இரவு 11 மணி வரை, மின்வெட்டு இல்லாமல், தடங்கலின்றி போட்டியை காண வசதி செய்தனர்.
---
பிரபலங்களின் படையெடுப்பு
மொகாலி போட்டியைக் காண இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களுடன், அகில இந்திய காங்., தலைவர் சோனியா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் வந்திருந்தனர். தவிர, பஞ்சாப், அரியானா மாநில முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல், புபிந்தர் சிங் ஹோடா, கவர்னர் சிவராஜ் படேல், பாலிவுட் நட்சத்திரங்கள் அமிர் கான், ஷக்தி கபூர் உள்ளிட்ட பலரும் போட்டியை ரசித்தனர். 3 வாரத்துக்கு முன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட, காங்., பொதுச்செயலர் ராகுல் காந்தி, வி.ஐ.பி., பகுதியில் அமர்ந்து போட்டியை பார்த்தார். திடீரென பாதுகாப்பை மீறி ரசிகர்கள் இருந்த பகுதிக்கு சென்று, அவர்களுடன் அமர்ந்து பார்க்கத்துவங்கினார்.
--
ஐ.சி.சி., மன்னிப்பு
தேசிய கொடியை விற்கும் உரிமையை, ஐ.சி.சி.,யிடம் பெற்றிருந்த வியாபாரி ஒருவர், மூவர்ணத்தில் ஆன பலூனை காலில் போட்டு மிதித்துள்ளார். இதை நேரில் பார்த்தவர்கள், அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஐ.சி.சி., கூறுகையில்,"" நடந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்காக, ஒவ்வொரு இந்தியரிடமும் ஐ.சி.சி., மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது, என தெரிவித்துள்ளது.
--
பாக்., பிரதமருக்கு விருந்து
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய, உலக கோப்பை அரையிறுதி போட்டியை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் மொகாலி மைதானத்தில் நேரில் பார்த்தனர். இவர்களுக்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், நேற்று இரவு விருந்து கொடுக்கப்பட்டது. இதில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் உட்பட மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர். இந்த நேரத்தில் பாகிஸ்தானின் ஆசாத் சபிக், யூனிஸ் கானை, யுவராஜ் சிங் வெளியேற்றினார்.

தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடி : கனிமொழி எம்.பி.,

தஞ்சாவூர்: கருணாநிதியின் திட்டங்கள் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது என்று கனிமொழி கூறினார்.

தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை முன், தி.மு.க., வேட்பாளர் உபயதுல்லாவை ஆதரித்து, கனிமொழி எம்.பி., வேனில் இருந்தபடி பேசியதாவது:"ஆண்டவனுடன் கூட்டணி' என, தி.மு.க., ஒருபோதும் கூறாது. "மக்களோடு கூட்டணி' என, யார் யாரோ கூறுகின்றனர். கருணாநிதி ஆட்சியின் சாதனைகளை, ஐந்தாண்டு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை, சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதைக் கூறி, தலை நிமிர்ந்து கருணாநிதியும், தி.மு.க.,வினரும்தான் மக்களோடு கூட்டணி என கூற முடியும்.எதிர் கூட்டணியினர், "இதை நாங்கள் செய்துள்ளோம்' என, ஒரு வார்த்தை கூட கூற முடியாது. கருணாநிதியையும், தி.மு.க.,வினரையும் வசைபாடத்தான் தெரியும்.சுயமாக சிந்திக்கத் தெரிந்திருந்தால் எதிரணியினர் முன்னதாகவே தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கலாம். கருணாநிதியின் தேர்தல் அறிக்கையை அடியொற்றி அறிக்கை விட்டுள்ளனர். கம்யூனிஸ்டுகள் கேரளத்தில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என அறிவித்துள்ளனர். இலவச திட்டங்கள் மக்களை கெடுக்கும் எனக்கூறிய அவர்கள், கேரளத்தில் நிதிநிலை அறிக்கையிலும், மேற்கு வங்க தேர்தல் அறிக்கையிலும் கருணாநிதியின் திட்டங்களை பின்பற்றி உள்ளனர்.

இந்தியாவில் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக கருணாநிதி திட்டங்கள் உள்ளன. அதை மாற்ற தமிழக மக்கள் நினைக்க மாட்டார்கள். சிலர் தோற்றுப்போனதும், மலை உச்சிக்கு ஓடிச்சென்று உயர நினைக்கின்றனர். 13 ஆண்டு ஆட்சியில் இல்லாதபோதும் தி.மு.க.,வினர் மக்கள் பிரச்னைகளுக்காக போராடி, சிறை சென்றனர்.ஜெயலலிதா தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தலுக்குத்தான் வருவார். தேர்தல் நெருங்கும்போது அறிக்கை விடுவார்.தி.மு.க.,வின் கடந்த தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் சிதம்பரம், "கதாநாயகன்' என்று கூறினார். இம்முறை பெண்களுக்கான பல திட்டங்கள் உள்ளதால் இந்த தேர்தல் அறிக்கையை, "கதாநாயகி' என, கருணாநிதி கூறினார்.கடந்த முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் மூடப்பட்ட உழவர் சந்தை பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது, நகரங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும் என கருணாநிதி அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் ஒரு குவிண்டால் நெல், 600 ரூபாய் என்று இருந்தது. தி.மு.க., ஆட்சியில் நெல் ஆயிரத்து 50 ரூபாயாகவும், கரும்பு டன் ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் வீடு தேடி, வேலை செய்யும் இடம் தேடி இடுபொருட்கள் வந்து சேரும், கருவுற்ற மகளை தாய் காப்பதுபோல, பணிபுரியும் பெண்களுக்கு நான்கு மாதம் விடுமுறை என அறிவித்துள்ளோம்.அ.தி.மு.க.,வினரால், "அம்மா' என அழைக்கப்படும் ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்கள், பெண் ஊழியர்கள் இரவு உடையில் கைது செய்யப்பட்டு இரவில் இழுத்துச் செல்லப்பட்டனர். உடையைக்கூட மாற்ற அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் அவர் ஆட்சியில் பட்டபாடு அனைவருக்கும் தெரியும்.ஜெயலலிதா மாறிவிட்டதாக சிலர் கூறுகின்றனர். "இத்தனை ஆண்டு மாறாத அவர் இனிமேலா மாறப்போகிறார். "அவர் ஆணவம் பிடித்தவர்' என, நான் கூறவில்லை. கருணாநிதி கூறவில்லை. அவரோடு பல ஆண்டுகள் இருந்த வைகோ கூறுகிறார்.

அவர் பத்திரிகையாளர்களை அழைத்து பேசலாம். ஆட்சிக்கு வந்தால் அவர் எப்படி நடந்து கொள்வார் எனவும் தெரியும். அப்படிப்பட்ட அ.தி.மு.க., ஆட்சி வராது. வந்தால் நமக்கு பயம், அச்சம்தான் அவரை நினைத்து தோன்றும்.சரித்திரத்தில் தான் பொற்கால ஆட்சியை படித்துள்ளோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நலத்திட்டங்கள் பெற்ற ஆட்சியாக கருணாநிதி ஆட்சி திகழ்கிறது.தி.மு.க., ஆட்சி நாத்திகர்கள் ஆட்சியல்ல. மக்களை மதிக்கத்தெரிந்த கருணாநிதி, ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோவிலின், ஆயிரமாவது ஆண்டு விழாவை கொண்டாடினார். இந்நகருக்கு, ரூ. 25 கோடி ஒதுக்கினார். பல கோவில்களில் குடமுழுக்கு நடத்தினார்.அவர் ஆட்சியில் பாரபட்சமின்றி, அனைத்து மக்களுக்குமான திட்டங்கள் வகுக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆட்சியில் இதுபோல நடந்ததில்லை. கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் எதிரணியினர் உட்பட மூன்று லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். பள்ளி, கல்லூரி செல்லும் உங்கள் குழந்தைகள் மடியில் லேப்-டாப் தவழ தி.மு.க.,வுக்கு ஓட்டளியுங்கள்.இவ்வாறு கனிமொழி பேசினார்.

வேட்பாளர் உபயதுல்லா, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம், நகராட்சி தலைவர் தேன்மொழி உட்பட பலர் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.

மந்திரி சபையில் பாமக சேராது: ராமதாஸ்

தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரி சபை அமைந்தாலும் அதில் பா.ம.க. சேர்ந்து கொள்ளாது என, ராமதாஸ் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

முன்னதாக வேளாங்கண்ணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். கும்மிடிப்பூண்டி எல்லையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வரை பல மாவட்டங்களுக்கு கடந்த 15 நாட்களாக சென்று வந்துள்ளேன்.

அங்கெல்லாம் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் இந்த அலை ஜெயலலிதாவிற்கு எதிராக வீசப்போகிறது.

தமிழகத்திற்கு தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரிசபை அமையுமா என்ற கேள்விக்கு முதல் அமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரி சபை அமைந்தாலும் அதில் பா.ம.க. சேர்ந்து கொள்ளாது என்றார்.

234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடிப்பு : வெளியானது வேட்பாளர் இறுதி பட்டியல்

சென்னை:தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 12 நாட்கள்மட்டுமே உள்ளன. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதுநேற்றுடன் முடிவடைந்து,வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டதால், 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை (28ம் தேதி) பரிசீலிக்கப்பட்டன. இதில், 1,153 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன; சிலர் வாபஸ் பெற்றுஇருந்தனர். மீதம் 3,082 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக சென்னையில் 294 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருப்பூர் வடக்கு தொகுதியில் 70 மனுக்கள் ஏற்கப்பட்டன.மனுக்களை வாபஸ் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதில், ஏராளமானோர் வாபஸ் பெற்றனர். இதுதவிர, அதிகாரபூர்வ வேட்பாளர்களின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தவர்களும் வாபஸ் பெற்றனர். இதையடுத்து, வேட்பாளர்களது இறுதிப் பட்டியல் நேற்று இரவு தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கியது போக, மற்ற பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்குசின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னமும், ஐ.ஜே.கே., கட்சிக்கு மோதிரம்சின்னமும் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷனின் 53 சின்னங்களில் ஒன்று, அவர்களது விருப்பப்படி ஒதுக்கப்பட்டது.முதலில், பதிவு செய்த கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அதன்பின், சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வேட்பு மனு பரிசீலனையின் போது, மயிலாப்பூர் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளராக மனுதாக்கல் செய்திருந்த, ஜெயந்தியின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரதுகணவர் தங்கபாலுவின் மனு ஏற்கப்பட்டது.அதேபோல, கிருஷ்ணகிரிதொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஹசீனா சையதுக்கு பதில், மக்பூல் ஜானை புதிய வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், அவர் குறிப்பிட்ட நேரத்துக்குள் மனுதாக்கல் செய்யவில்லை. இதை யடுத்து, ஹசீனாவே காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் எனக் கருதப்பட்டது. ஆனால், இதில் திடீர் திருப்பமாக, அவர் தனது மனுவை நேற்று வாபஸ் பெற்றார். மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரது கணவர் சையத், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார்.ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால், பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. இந்த அனல் பறக்கும் பிரசாரம், ஏப்ரல் 11ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 13ம் தேதி பதிவாகும் ஓட்டுக்கள் எல்லாம், மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

மும்பையில் இலங்கை அணி

மும்பை: உலக கோப்பை பைனலில் பங்கேற்கும் இலங்கை அணி, மும்பை வந்தது.
கொழும்புவில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் இலங்கை அணி, நியூசிலாந்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து வரும் ஏப். 2ம் தேதி மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கும் பத்தாவது உலக கோப்பை தொடரின் பைனலில் பங்கேற்கிறது. இதற்கான சங்ககரா தலைமையிலான வீரர்கள் நேற்று, பலத்த பாதுகாப்புக்கு இடையில் மும்பை வந்தனர். நேராக தாஜ் ஓட்டலுக்கு சென்ற அவர்கள், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியை "டிவி' யில் பார்த்து ரசித்தனர்.

மொஹாலியில் தனுஷ் - ஐஸ்வர்யா!

அப்பா ரஜினியைப் போலவே ஏக கிரிக்கெட் ஆர்வம் மிக்கவர் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ். சென்னையில் இந்திய அணி விளையாடும் முக்கிய மேட்ச்களைப் பார்க்க ஸ்டேடியத்துக்கே போகும் அளவுக்கு தீவிர கிரிக்கெட் ரசிகை.

இந்த முறை இந்தியா - பாகிஸ்தான் ஆடும் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைக் காண கணவர் தனுஷிடன் மொஹாலிக்கே பறந்துவிட்டார் ஐஸ்வர்யா.

டெல்லியில் ஆளைப் பிடித்து எப்படியோ இரண்டு டிக்கெட்களைப் பெற்றுவிட்ட தனுஷும் ஐஸ்வர்யாவும் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி போனார்கள். இரவு டெல்லியில் தங்கிவிட்டு, காலையில் மொஹாலிக்குப் போய்விட்டனர்.

இது ஒரு சரித்திர முக்கியத்துவம் மிக்க போட்டி. கண்டிப்பாக நேரில் போய் பார்க்க வேண்டும் என முன்பே முடிவு செய்துவிட்டேன். தீவிர கிரிக்கெட் ரசிகையான ஐஸ்வர்யாவுடன் மாட்ச் பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவம்தான், என்று கூறினார் தனுஷ்.

ஐஸ்வர்யா கூறுகையில், கிரிக்கெட் ஒரு மதம் என்றால், சச்சின் அதன் கடவுள் என்ற ரசிகர்களின் கருத்துதான் எனக்கும். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். இந்தியா ஜெயிக்கனும், சச்சின் செஞ்சுரி போடணும். இதான் என் பிரார்த்தனை, என்றார்.

அதே பிரார்த்தனைதான் 100 கோடி இந்தியர்களுக்கும்!!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை அடகு வைத்துவிடுவார் கருணாநிதி! - விஜயகாந்த்

தருமபுரி: ஆறாவது முறையும் முதல்வர் வாய்ப்பை கருணாநிதிக்கு வழங்கினால் தமிழகத்தை அடமானம் வைத்துவிடுவார், என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., காயிதே மில்லத், அம்பேத்கர் ஆகியோர் பொதுவாழ்வில் கதாநாயகர்கள். ஆனால் முதல்வர் கருணாநிதியோ வில்லன்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்துவதில் மெத்தனப் போக்கு உள்ளது. 2012-ல்தான் முடியும் என்கின்றனர். ரூ.500 கோடியில் முடிக்க வேண்டிய திட்டத்தை, ரூ.1,200 கோடியில் செயல்படுத்துகின்றனர்.

ஜப்பான் சென்று நிதி பெற்றுவருவதாகக் கூறுகிறார் துணை முதல்வர். ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டில் இருந்து இனி தொடர்ந்து நிதி வருமா என்பது சந்தேகமே.

தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாதவர், குடும்பத்தினரைப் பாதுகாக்க மட்டும் டெல்லி செல்கிறார். சி.பி.ஐ. விசாரணை வீட்டில் நடைபெறக் கூடாது என்பதற்காக அறிவாலயத்தில் நடைபெறச் செய்தவர். விசாரணை எங்கு நடந்தாலும் வெட்கக்கேடுதான்.

மனிதனுக்கு ரத்தம் எப்படி முக்கியமோ, விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் மின்சாரம் முக்கியத் தேவை. ஆனால், கடும் மின்வெட்டு காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழ் இனத்துக்காகப் போராடுவதாக கூறும் திருமாவளவன், மருத்துவ சிகிச்சைக்காக பிரபாகரனின் தாயார் சென்னை வந்தபோது அனுமதி மறுக்கப்பட்ட நாளிலேயே தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். தமிழக மக்கள் கடந்த தேர்தலில் தவறான முடிவு எடுத்துவிட்டனர். தி.மு.க. கூட்டணியை கொள்கை கூட்டணி என்கின்றனர்.

உண்மையில் அது கொள்ளைக் கூட்டணி. திருவாரூரில் கூட்டணித் தலைவர்கள் கூடினார்கள். ஆனால் இங்கு கூட்டணியைச் சேர்ந்த தொண்டர்கள் ஒன்றாகக் கூடியுள்ளனர். இதுதான் உண்மையான கூட்டணி," என்றார் அவர்.

நானும் ரோஷக்காரன்தான்!

பின்னர் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளர் கே.பி. அன்பழகனுக்கு ஆதரவாகவும், தருமபுரியில் தேமுதிக வேட்பாளர் ஏ. பாஸ்கர், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் பி. பழனியப்பன், பென்னாகரம் வேட்பாளர் ந. நஞ்சப்பன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தும் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "சமூக நீதி காக்க பாளையங்கோட்டை சிறையைத் தவிர அனைத்துச் சிறைகளுக்கும் சென்றிருப்பதாகவும், விஜயகாந்த் எந்த சிறைக்கு சென்றார் என்றும் பாமக தலைவர் கேட்கிறார். எனது பெயரை அவர் குறிப்பிட மாட்டார், என்று சொல்லும்போது, நானும் குறிப்பிட மாட்டேன். நானும் ரோஷக்காரன்தான்.

எந்த சமூக நீதியைக் காக்க சிறை சென்றார் அவர். பேருந்துகளை உடைத்தும், குடிசைகளை எரித்தும், மரங்களை வெட்டியும் சிறைக்குச் சென்றிருக்கலாம்.

இரு சமூகத்தினரிடையே சாதி தீயை வளர்த்து அதில் குளிர்காய நினைக்கிறார்கள். ஆனால், கலவரத்துக்கு காரணமானவர்களை அந்தத் தீயே எரித்துவிடும். இரு சமூகத்தினருக்கு இடையே சாதி மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் நடத்துகிறது பாமக.

இந்த மோதலில் சிறைக்குச் சென்றவர்களுக்கு எந்தவித உதவியும் அளிக்கவில்லை. இதுவரை, வழக்கு விசாரணைக்காக அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுதான் சமூக நீதிக்காக சிறைக்கு சென்ற லட்சணமா?

டாஸ்மாக் கடைகளை தங்களது மகளிரணியை வைத்து மூடுவதாக அறிவித்தார். இப்போது, தேர்தலுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து பேசலாம் என்கிறார். பாமக எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்று.

கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக செயற்குழு, பொதுக் குழுவை கூட்டி பெட்டிகள் வைத்து கட்சியினரிடம் வாக்குக் கேட்டு முடிவு செய்தார்கள். இப்போது, திமுகவுடன் கூட்டணி அமைக்க எந்தப் பெட்டி வைத்து முடிவு செய்தனர்?

எனது உருவ பொம்மையை பாமகவினர் எரிப்பதால், நெருப்பு வைத்து என்னை மிரட்ட முயற்சிக்கின்றனர். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன். தேமுதிக தொண்டர்களாலும் இத்தகைய செயல்களில் ஈடுபட முடியும். அந்த வழியில் தொண்டர்களை நான் ஈடுபடுத்தமாட்டேன்.

மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை பெற்றிருந்தபோது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளிலோ, கல்லூரிகளிலோ மருத்துவம் சார்ந்த அமைப்புகளிலோ பாமக தங்களது சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பை ஏன் ஏற்படுத்தித் தரவில்லை?

ஆனால், நான் சொந்தப் பணத்தில் ஏழை, எளியோருக்கு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். 25 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் உதவித் தொகை வழங்கி வருகிறேன். இலவச கம்ப்யூட்டர் மையங்களை மாவட்டந்தோறும் தொடங்கி பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் கலப்புத் திருமணங்களையும், இலவசத் திருமணங்களையும் நடத்தி வருகிறேன். பெண்கள் நாட்டின் கண்கள் என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறேன்.

எனது, கல்வி நிறுவனத்துக்கு அருகே ஏழைகளுக்காக ரூ.40 லட்சத்தில் திருமண மஹால் கட்டியுள்ளேன் என்றார் விஜயகாந்த்.

சுயநலத்துக்காக பசுமைத் தாயகம்

அணைக்கட்டு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் வி.பி.வேலுவை விஜயகாந்த் பேசுகையில், "தே.மு.தி.க.வில் ஏழைகளுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளேன். அவர்கள் வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு நன்மை செய்யாமல் இருக்க விட மாட்டேன்.

தி.மு.க. அதிகார மையமாக உள்ளது. கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் தமிழகத்தை கூறுபோட்டு கொண்டுள்ளனர். சினிமா துறையும் அவர்கள் கைகளுக்குள் சென்றுவிட்டது.

டாக்டர் ராமதாஸ் சுயலாபத்துக்காக பசுமைத் தாயகம் அமைப்பை நடத்துகிறார். அவரை நம்பிய சமுதாய மக்களுக்கு என்ன செய்தார்?

மக்களுடன்தான் கூட்டணி என்று சொல்லி வந்த நான், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.

எனது மானசீக குரு எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியுடன்தான் நான் கூட்டணி வைத்துள்ளேன். கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் இன்றைக்கு கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என கூறுகிறார்கள்.

கரும்புத் தோட்டத்துக்கு யானையை காவல் வைத்ததுபோல், தமிழகத்துக்கு கருணாநிதியை காவலாக வைத்தால் தமிழகம் உருப்படுமா என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்," என்றார் விஜயகாந்த்.

பாகிஸ்தானில் குண்டு வெடித்தது; 6 பேர் பலி

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதி தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. அங்கு அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த நிலையில், அப்பகுதியில் சுவாபி என்ற இடத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 6 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

அஞ்சு வருஷம் தூங்கிட்டு அம்மா வராங்க! - நெப்போலியன் பாட்டு

திருவண்ணாமலை: அஞ்சுவருஷம் தூங்கிவிட்டு அம்மா வராங்க... என ராகம் போட்டுப் பாட்டுப் பாடி மக்களிடம் திமுகவுக்கு வாக்கு சேகரித்தார் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன்.

திருவண்ணாமலை, கீழ்ப்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் ஆகிய தொகுதிகளின் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் நெப்போலியன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய நெப்போலியன் ஒரு பாட்டுப் பாடினார்.

ஐந்து வருஷம் தூங்கிவிட்டு அம்மா வராங்க.
அம்மா வராங்க.

நான் அதைப் பண்ணுவேன்,
இதைப் பண்ணுவேன்னு சும்மா சொல்றாங்க.
நீங்க நம்பாதீங்க. இதை நம்பாதீங்க.

அரசு ஊழியரை அலற வைச்சாங்க.
அடி தட்டு மக்களையும் மிரள வைச்சாங்க.
புதுப் புது சட்டம் போட்டு பதற வைச்சாங்க.
இப்போது புளுகு மூட்டையை தூங்கி வராங்க...

என்று அவர் பாடிய பாட்டை மக்கள் ரசித்துக் கேட்டனர்.

தர்மபுரியில் நடந்த பிரசாரத்தில் விஜயகாந்த் என்னை தாக்கினாரா? தே.மு.தி.க. வேட்பாளர் பரபரப்பு பேட்டி

தர்மபுரி மாவட்டத்தில் தே.மு.தி.க மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு..தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அவர் தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரை ஆதரித்து தர்மபுரி பஸ் நிலையம் அருகே உள்ள ராஜகோபால் கவுண்டர் பூங்கா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாலை 3.15 மணியளவில் அங்கு பிரசாரம் செய்தார்.

அவருடன் வேட்பாளர் பாஸ்கர் கை கூப்பி நின்றவாறு நின்றார். அவரை விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். இதை யடுத்து வேட்பாளர் பாஸ்கர் அதே வாகனத்திற்குள் உட்கார்ந்து கொண்டார். அந்த சமயத்தில் விஜயகாந்த் பேசும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை.

அதோடு விஜயகாந்த் பேசும் போது வேட்பாளர் பாஸ்கர் என்பதற்கு பதிலாக பாண்டியன் என்று கூறினார். அப்போது வேட்பாளர் என் பெயர் பாஸ்கர் என கூறமுயற்சித்ததாகவும், இதைக்கேட்ட விஜயகாந்த் வேட்பாளரை பிரசார வாகனத்திலேயே பொதுமக்கள் மத்தியில் தாக்கியதாக பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் வேட்பாளரை தாக்க வில்லை. உதவியாளரைத்தான் தாக்கினார் என்றும் பேசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார்.

மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்தார். பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார். ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். மேலும் நான் கட்சி கலர் அணிந்த துண்டு கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. எனது வெற்றியை தடுக்க இது போன்ற ஒரு பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலககோப்பை இரண்டாவது அரைஇறுதிப்போட்டி: இந்தியா 261 வெற்றி இலக்கு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மொகாலியில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் அஷ்வினுக்கு பதிலாக ஆஷிஸ் நெஹரா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரசாக் கிலானி ஆகியோர் பார்க்கின்றனர்.

அதன் படி தொடக்க வீரர்களாக சச்சினும், ஷேவாக்கும் களம் இறங்கி விளையாடினர் முதல் ஓவரில் இந்தியா 4 ரன் எடுத்த்து ஷேவாக் அதிரடியாக விளையாடி வந்தார். வகாப் ரியாஸ் வீசிய 6-வது ஓவரில் ஷேவாக் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் 38 ரன் எடுத்தார் இதில் 9 பவுண்டரிகளும் அடங்கும்.

பின்னர் களம் வந்த காம்பீர் 27 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மறு முனையில் அதிரடியாக விளையாடி சச்சின் அரை சதம் அடித்தார். காம்பீர் அவுட் தொடர்ந்து பின்னர் களம் வந்த கோக்லி 9 ரன்னிலும், யுவராஜ் சிங் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்கள்.

அடுத்ததாக வந்த கேப்டன் டோனி விக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் விளையாடி வந்தார் சிறப்பாக விளையாடி வந்த சச்சின் 37-வது ஓவரில் அஜ்மல் பந்தில் அப்ரிடியிடம் கேட்ச் ஆனார். அவர் 85 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக வந்த ரெய்னா அடித்து விளையாடி வந்தார். பொறுப்புடன் விளையாடி வந்த டோனி 25 அடித்தருந்த போது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 205 ரன்னக இருந்தது.

பின்னர் வந்த ஹர்பஜன் சிங் 12 ரன்னில் அவுட் ஆனார். அதைதொடர்ந்து வந்த வீரர்கள் ஜாகீர்கான் 9 ரன்னிலும் நெக்ரா 1 ரன்னிலும் பெவுலியன் திரும்பினர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 260 ரன்கள் எடுத்தது. ரெய்னா 38 ரன்னுடனும் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். பந்து வீச்சாளர்கள் தரப்பில் அதிக பட்சமாக வகாப் ரியாஸ் 5 விக்கெட் கைப்பற்றினார்.

'அண்ணே, என் பேரு பாண்டி இல்லை'!..தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்!!

தர்மபுரி: வழக்கமாகவே நிதானம் இழந்த நிலையிலேயே காணப்படுபவர் தேமுதிக தலைவர் விஜய்காந்த். இதனால் தான் அவரை குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக அவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே குற்றம் சாட்டினார்.

இந் நிலையில் நேற்று தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்த விஜய்காந்த், அவரை 'கும் கும்' என்று குத்தினார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர், அண்ணே என் பேரு பாண்டியன் இல்லைன்னே.. பாஸ்கர் என்று திருத்தினார்.

இதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கும்படி மைக்கில் சத்தமாகவே பாஸ்கர் சொல்லிவிட, உடனே நிதானம் இழந்தார் விஜய்காந்த்.

ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். அவை வேனுக்குள் தள்ளி முகத்திலும் முதுகிலும் குத்து குத்து என்று குத்தியதோடு, சரமாரியாக அறைந்தார்.

இதையடுத்து அந்த வேட்பாளர் வேனுக்குள்ளேயே பம்மியபடி, கைகளால் விஜய்காந்தின் அடிகளை தடுத்தார். ஆனாலும் விஜய்காந்த் முகத்தைத் தேடித் தேடி அவரைக் குத்திவிட்டு, அந்த இடத்தைக் காலி செய்தார்.

விஜயகாந்த்தின் இந்த கேவலமான செயல் அப் பகுதியில் நின்றிருந்த மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.

18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்!

நாற்பத்தைந்து வயதுக்காரரான சீயான் விக்ரம் புதிய படமொன்றில் 18 வயசுப் பையனாக நடிக்கிறார். இதென்ன கூத்து? என நினைக்காதீர்கள். டைரக்டர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படம் தெய்வ திருமகன். இந்த படத்தில்தான் அவர் 18 வயசுப் பையனாக நடிக்கிறாராம். இதற்காக அவர் பலமடங்கு உடல் இளைத்திருக்கிறாராம். அதுமட்டமல்ல... இந்த கெட்டப் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியிடங்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு கூட வராமல் தவிர்த்து வந்தார் விக்ரம். இதுவரை கசியாமல் இருந்த இந்த ‌செய்தியை, விரைவில் படம் படம் ரீலிஸ் ஆகவிருப்பதால் இப்போது லேசாக கசிய விட்டிருக்கிறார்கள். எந்த கேரக்டராக இருந்தாலும் ரொம்பவெ மெனக்கெட்டு நடித்து வெற்றிபெறும் சீயான், இந்த சவாலான கேரக்டரையும் சிறப்பாகவே செய்திருப்பார் என நம்புவோம்.

அப்பா, தாத்தா கேரக்டரில் நடிக்க வேண்டிய ஐம்பத்தெட்டு, அறுபது வயசுக்காரர்களெல்லாம் 18 வயசு இளம் ஹீரோயின்களுடன் ஜோடிபோட்டு டூயட் பாடிக் கொண்டிருக்கும் சினிமா உலகம்தானே இது?

போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பா? - த்ரிஷா ஆவேசம்

ஹைதராபாத்: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நைஜீரிய கும்பலுடன் என்னைத் தொடர்புபடுத்துவதா என ஆவேசமாகக் கேட்டுள்ளார் நடிகை த்ரிஷா.

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக உள்ள த்ரிஷா தொடர்ந்து சிக்கல்களில் மாட்டி வருகிறார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் சிக்கிய நைஜீரிய போதை மருந்து கும்பலுக்கும் தெலுங்கு சினிமா புள்ளிகளுக்கும் பெரிய அளவில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பிரபல நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் மற்றும் நண்பர்களும் இதில் சிக்கினர்.

இந்த நைஜீரிய போதை மருந்து கும்பலின் செல்போனில் நடிகை த்ரிஷா உள்ளிட்ட பிரபல நடிகைகளின் நம்பர்களும் இருந்ததாக போலீசார் தகவல் வெளியிட்டனர். தொடர்ந்து த்ரிஷாவிடமும் போனில் விசாரணை நடத்தினர்.

இதனால் அவருக்கும் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான் என செய்திகள் பரவின.

இந்த நிலையில், நேற்று ஹைதராபாதில் பேட்டியளித்த த்ரிஷா இதுபற்றிக் கூறுகையில், "என்னைப் பற்றி ஆதாரமில்லாமல் வரும் புகார்களை கண்டிக்கிறேன். சமீபத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் என்னை தொடர்பு படுத்தி செய்தி வந்துள்ளது. என்னை பழிவாங்க யாரோ இதனை கிளப்பி விடுகின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை.

தொடர்ந்து அதுபோன்ற கிசுகிசுக்கள் வருகின்றன. அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற கிசு கிசுக்களால் நான் மனம் உடைந்து போய் அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் எனது தாய்தான் பக்கபலமாக இருந்துள்ளார். அவர்தான் இத்தகைய வேதனைகளில் இருந்து என்னை வெளியே கொண்டு வருவார்.

நாயகிகளை முதன்மைப்படுத்தும் கதைகள் இல்லை...

பழைய கதாநாயகிகள் போல் இப்போதைய நாயகிகள் நடிப்பது இல்லை என விமர்சிக்கின்றனர். பழைய படங்களில் நாயகிகளை முதன்மைபடுத்தி கதைகள் இருந்தன. ஆனால் இப்போது நாயகிகளை கவர்ச்சிப்படுத்திதான் படம் எடுக்கிறார்கள்.

வில்லியாக நடித்தால் முழு திறமைகளையும் வெளிப்படுத்த முடியும். படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி வில்லி வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறேன்.

திருமணத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆனால் அது காதல் திருமணமாக இருக்க வேண்டும். . நான் விரும்பும் ஆண் புத்திசாலியாக இருக்க வேண்டும். பேச்சுத் திறமையும் வேண்டும். பேச்சாற்றல் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.

கல்யாணம் ஆனால் அழகு போயிவிடும் என்று சில பெண்கள் கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

வெற்றி தோல்வி முக்கியமில்லை...

சினிமாவில் நிலைத்து நிற்பதுதான் முக்கியம். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக்கூடாது. எனது ஒவ்வொரு படத்தையும் புதுப் படமாகவே பார்க்கிறேன். நல்ல கதாபாத்திரங்களே இதுவரை அமைந்துள்ளன. குடும்பபாங்கான வேடம், இளைஞர்களுக்கு பிடித்த மாதிரியான வேடங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி தனது கேரக்டர்களையும் மாற்றிக்கொள்கிறேன். உடம்பை அழகாக வைத்துக்கொள்ளவும் அக்கறை காட்டுவேன். அதற்காக தினமும் யோகா உடற்பயிற்சிகள் செய்கிறேன்.

ஒவ்வொரு நடிகைகளும் இந்தி படங்களில் நடிக்க கனவாக உள்ளது. எனக்கும் அந்த கனவு நிறைவேறிவிட்டது. இந்தியில் நடிப்பதன் மூலம் உலக அளவில் ரசிகர்கள் பெற முடியும். இதனால்தான் பலரும் பாலிவுட்டுக்கு போக விரும்புகிறார்கள்.

இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்றுமாம்!!

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்களுக்கு எதிரியாக செயல்பட்ட நடிகர் ஆர்யா, இப்போது இந்தியாவுக்கே எதிரி ஆகியிருக்கிறார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்று கூறியிருக்கும் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உலக கோப்பை ‌கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகி்தான் அணி வெற்றி பெறும்; இந்தியா ஜெயிக்காது என்று நினைக்கிறேன், என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் சிறந்த அணியாக இருப்பதாகவும், இந்த உலக கோப்பை போட்டியில் அவர்கள் நிறைய ரன் எடுத்துள்ளனர், சாஹித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடித்தருவார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்றும் ஆர்யா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆர்யாவின் இந்த தேசவிரோத கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:-

நடிகர் ஆர்யா சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏற்கனவே மலையாள நடிகர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் நடிகர்களுக்கு எதிராகவும் பேசி கண்டனத்துக்கு உள்ளானார். இப்போது பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிதான் தற்போது உயர்வாக உள்ளது. அது வலுவிழந்த அணியாக இருந்தபோது இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இளைஞரும் பிரார்த்தித்தனர். அரை இறுதிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற நாடுமுழுவதும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நடந்து வருகின்றன. இந்து முன்னணி சகோதரர்கள் இணைந்து இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.

மதங்களை கடந்து இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியன் இதயமும் துடிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என ஆர்யா அந்த அணிக்கு வக்காலத்து வாங்குவது இளைஞர்கள் மனதை புண்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அணி வலுவாக இல்லை. ஏற்கனவே சூதாட்டத்திலும், போதை மருந்து வழக்குகளிலும் சிக்கி பல சிறந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டு அந்த அணி சின்னா பின்னமாகி கிடக்கிறது. அந்த அணிக்கு ஆதரவாக ஆர்யா சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவை வெற்றி நாயகனாக்கிய தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகர் ஆர்யா, பின்னர் அதற்கு வருத்தம் தெரிவித்தார். இப்போது இந்தியாவுக்கு எதிராக பேசி புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஆர்யாவின் ஆரூடம் பலிக்குமா? இல்லையா? என்பதல்ல இப்போதைய கேள்வி. ஒரு இந்தியனாக, அதுவும் பிரபலமான நடிகனாக இருந்து கொண்டு அவர் இப்படி சொல்லியிருப்பது சரியா, தவறா? என்பது பட்டிமன்ற விவாத்துக்குரியதுதானே!

அரை இறுதிப் போட்டியை நேரில் பார்க்கும் பாலிவுட்-ஷூட்டிங் ரத்து

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இன்று மொஹாலியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைப் பார்க்கும் ஆவலில் இன்று பாலிவுட்டில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.

இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் மொஹாலிக்குப் படையெடுக்கின்றனர்.

ஆமிர்கான், அவரது மனைவி கிரண் ராவ், ப்ரீத்தி ஜிந்தா, சுனில்ஷெட்டி, ராகுல் போஸ், பாடகர் மிகா சிங் உள்ளிட்டோர் நேரடியாக போட்டியைக் காணவுள்ளனர். அதேபோல ஷாருக் கான், அகஷய் குமார், இம்ரான் கான், தீபிகா படுகோன் ஆகியோர் டிவிகளில் பார்த்து ரசிக்கவுள்ளனர். மேலும் வீடுகளில் விருந்துக்கு ஏற்பாடு செய்து உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் போட்டியை ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.

ஆமிர்கான் போட்டி குறித்துக் கூறுகையில், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். இந்தியாவை இறுதிப் போட்டியில் காண பெரும் ஆவலுடன் இருக்கிறேன். எனது இயக்கும் ஒரு கிரிக்கெட் வெறியர் என்பதால் படப்பிடிப்பைக் கூட ரத்து செய்து விட்டார். எனவே மொஹாலியில் போய் நேரடியாக பார்த்து ரசிக்கப் போகிறேன் என்றார்.

தீபிகா படுகோன், சித்ராங்கதா சிங், ஜான் ஆப்ரகாம் ஆகியோர் தற்போது லண்டனில் உள்ளனர். தங்களது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு டிவியில் இருந்தபடி போட்டியை ரசிக்க அவர்கள் தயாராகி விட்டனர்.

சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது வீட்டையே குட்டி ஸ்டேடியமாக்கி விட்டார். தனது பாலிவுட் நண்பர்கள் அத்தனை பேரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவி கெளரி சிறப்பு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார். நண்பர்கள் புடை சூழ தனது குடும்பத்தினருடன் போட்டியை ரசித்துப் பார்க்கவுள்ளார் ஷாருக்.

மொத்தத்தில் பாலிவுட்டில் இன்று பெரும்பாலான படப்பிடிப்புகளுக்கு லீவு விட்டு விட்டனர். போட்டி தொடங்கி முடியும் வரை பாலிவுட் பிரபலங்கள் யாரையும் எங்குமே பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 2ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை-கனிமொழியும் சேர்க்கப்படுவார்?

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது ஏப்ரல் 2ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் குற்றப்பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் சேர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது.

ராசா மீது ஊழல் வழக்கு, அன்னியச் செலாவணி குற்றச்சாட்டு, ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக சிபிஐ ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை இம்மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும், அதற்கு மேலும் 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரடங்கிய பெஞ்ச், சிபிஐ மனுவை விசாரித்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகை 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளது. இதை தயாரித்து வருவதாகவும், இதற்கு மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில் மிகப் பெரும் அளவுக்கு அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட மீறல் நடந்திருப்பதாகவும், பினாமி பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. சிபிஐ அளித்துள்ள ஆவணத்திலிருந்து இது புலனாகிறது. எனவே மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிப்பதாக நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு தொடர்பாக திரட்டப்பட்ட அனைத்து தகவல்களையும் அமலாக்கப் பிரிவு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அமலாக்கப் பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விவர அறிக்கையின்படி இந்த வழக்கில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பல தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ. ராசா இருந்த காலத்தில் இத்தகைய பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்திடமிருந்து ரூ. 106.95 கோடி பெறப்பட்டுள்ளது. ஒரே ஒரு பங்குத் தொகைக்காக இந்த அளவு தொகை பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை சந்தையில் வெறும் ரூ. 270 ஆக இருந்தபோது இந்த அளவுக்கு பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்று அமலாக்கப் பிரிவு தெரிவித்திருந்தது.

அன்னியச் செலாவணி பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தை மீறிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளதாகவும் இது தொடர்பாக விரிவான குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அது தெரிவித்திருந்தது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்ட பல்வேறு முதலீடுகள் விவரத்தையும் நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு அளித்துள்ளது. இந்த முதலீடுகளில் பெருமளவு வெளிநாடுகளில் இருந்து வந்தவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

நிறுவனங்கள் லைசென்ஸ் பெற்ற பிறகு வெளிநாடுகளில் இருந்து இவை வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவுகள் அடங்கிய குழு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இக்குழு மோரீஷசிலிருந்து பணம் வந்த பல்வேறு நாடுகளுக்கும் செல்லும்.

இதேபோல நீரா ராடியா பல்வேறு தரப்பினருடன் தொலைபேசியில் பேசிய உரையாடல் பதிவுகள் எழுத்து வடிவில் மாற்றப்பட்டு அளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்தது.

கனிமொழிக்கு ஆபத்து:

இந்த நிலையில் நேற்று ஸ்வான் நிறுவன அதிபர் ஷாஹித் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா மற்றும் நெருங்கிய நண்பர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பல்வாவின் ஸ்வான் நிறுவனம் கலைஞர் டிவிக்கு கடன் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதனால் கனிமொழிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த இருவரும்தான் கலைஞர் டிவிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முக்கிமயாக செயல்பட்டவர்கள் என்றும் சிபிஐ கூறியுள்ளது. இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும் கனிமொழியிடம் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்தக் கூடிய வாய்ப்புகளும் உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

சிறப்பு நீதிபதி நியமனம்:

இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பிரகாஷ் சைனி நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் யோசனைப்படி இந்த தனி நீதிமன்றம் அமைக்கப்படுகிறது.

வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும் * கேப்டன் தோனி அறிவுரை

மொகாலி: "பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து வெளியாகும் பல்வேறு செய்திகளால், வீரர்கள் தங்கள் கவனத்தை சிதறவிட்டுவிடக் கூடாது. இன்றைய போட்டியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், இன்று இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கிரிக்கெட் உலகின் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது:
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி குறித்து, பல்வேறு செய்திகளை மீடியா வெளியிட்டு வருகிறது. இதிலிருந்து எங்கள் மீது எந்தளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. இவைகள் அனைத்தும் கிரிக்கெட்டின் ஒருபகுதி தான். இதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
உலக கோப்பை என்பது மிகப்பெரிய தொடர். இதற்காக சிறப்பாக தயாராகியுள்ளோம். இருப்பினும், இதற்கு முந்தைய போட்டிகளில் விளையாடியதைப் போல, இப்போதும் அதுபோலத்தான் விளையாட போகிறோம். மற்றபடி சொந்தமண் என்பதால் ஏற்படும் நெருக்கடி, எங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது.
சிறப்பான பவுலிங்:
அதேநேரம், பாகிஸ்தான் அணி சிறந்த பவுலிங்கை கொண்டுள்ளது. அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும், ஸ்பின்னர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். தவிர, "பார்ட் டைம்' பவுலர்களும் அசத்துகின்றனர். இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களில் இந்த வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். அப்ரிதியின் பந்துகளை கவனித்து, விளையாடுவோம்.
பேட்டிங் நம்பிக்கை:
பொதுவாக 5,6 அல்லது 7வதாக களமிறங்கும் போது, அதிகமாக பேட்டிங்கிற்கு வாய்ப்பு வராது. என்னைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் சிறப்பாகவே விளையாடுகிறேன். ஒருசில நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை இருக்கும். வங்கதேசத்துக்கு எதிராக நல்ல சூழ்நிலை இருந்த போது, நான் பேட்டிங் செய்யவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், அதிரடிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், பந்து நேராக பீல்டரிடம் சென்றுவிட்டது.
முக்கியமான போட்டி:
இந்த போட்டி முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரம், வரும் காலங்களில் இதை மறந்து விடுவோம். கடந்த 2007 "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் அரையிறுதி, பைனலின் போது என்ன மனநிலையில் இருந்தோம் என்பது இப்போது தெரியாது. ஏனெனில் அடுத்த 3 ஆண்டுகளில், பல போட்டிகளில் பங்கேற்று விட்டோம்.
ஆடுகளம் தெரியாது:
அதேநேரம், இன்றைய நாளின் இறுதியில் ஏதாவது ஒரு அணி தோற்கத்தான் வேண்டும். இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல, அனைத்து விளையாட்டிலும் இப்படித்தான் நடக்கும். இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, 50 ஓவரும் அசத்தினால் வெற்றி பெறலாம்.
மொகாலி ஆடுகளத்தை இன்னும் பார்வையிடவில்லை. இதனால் அதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. ஆனால், பெரும்பாலான நேரங்களில், பேட்ஸ்மேன்களுக்கு சாதமாகத்தான் இருந்து வருகிறது.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.

அரசியல் மாற்றம்
இன்றைய போட்டியில் இரண்டு நாடுகளின் பிரதமர்களின் பங்கேற்பு குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,"" அணியின் கேப்டனாக எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறமையாக செய்வேன். போட்டியை காண பிரதமர்கள் வருவது வீரர்கள் கவனத்தை திசை திருப்பலாம். இருப்பினும், இரு நாடுகள் இடையே அரசியல் ரீதியாக மாற்றத்தை கொண்டுவர, நாங்கள் எப்படி உதவலாம் என, நினைத்துக்கொண்டுள்ளேன்,'' என்றார்.

லிபிய மக்களை காக்கும் பணியில் நேட்டோ படைகள்: அதிபர் ஒபாமா

வாஷிங்டன், மார்ச் 29: லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்களை காக்க அங்கு புதன்கிழமை முதல் நேட்டோ படைகள் பணியில் அமர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா திங்கள்கிழமை தெரிவித்தார்.
லிபியா தொடர்பான அமெரிக்க கொள்கை குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இது குறித்து மேலும் கூறியது: "ராணுவத்தின் விமான தாக்குதலில் இருந்து மக்களை காக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகள் சிலவும் தங்களது படைகளை அங்கு அனுப்பியிருந்தன.
புதன்கிழமை முதல் நேட்டோ படைகள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்படும். கடாஃபி ஆதரவு ராணுவத்தை நேட்டோ படைகள் ஒடுக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இந்த நடவடிக்கையின்போது உளவு, தொலைத் தொடர்பு, போக்குவரத்து மீட்புப் பணி ஆகியவற்றில் நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும். லிபிய படைகளை ஒடுக்குவதுடன் நமது பணி முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. லிபியாவில் அல்லலுறும் மக்களுக்கு சர்வதேச சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் உணவு, மருந்துகள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை செய்ய வேண்டும்' என்றார்.
இதனிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, லண்டன் செல்லவுள்ளார். அங்கு முகாமிட்டுள்ள லிபிய எதிர்க் கட்சித் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்துவார். லிபியாவில் மக்கள் விரும்பும் மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது தொடர்பாக அவர்களுடன் ஹிலாரி ஆலோசிப்பார் என தெரிகிறது.
லிபிய படைகள் தாக்குதல்: அதிபர் கடாஃபியின் சொந்த ஊரான சிரட்டேவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விட்டதாக திங்கள்கிழமை தகவல் வெளியானது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் ஆதரவுடன் அவர்கள் அந்த நகரைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களை லிபிய படைகள் விரட்டி மீண்டும் சிரட்டே நகரை தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டதாக அல் ஜசீரா தொலைக்காட்சி அறிவித்தது. ராக்கெட் மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தி கிளர்ச்சியாளர்களை லிபிய படைகள் பின் வாங்கச் செய்தததாகவும் அது தெரிவித்துள்ளது.

பைனலுக்கு முன்னேறுமா இந்தியா! * இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை

மொகாலி: மொகாலியில் இன்று நடக்கும் உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் "பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பைனலுக்கு முன்னேற இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக் (342 ரன்கள்), அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இவர், இன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழியலாம். "சூப்பர் பார்மில் உள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (379 ரன்கள்), சதத்தில் சதம் கடந்து சாதிக்கலாம். மூன்றாவது வீரராக களமிறங்கும் காம்பிர் (269 ரன்கள்), தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.
யுவராஜ் நம்பிக்கை:
"மிடில்-ஆர்டரில் யுவராஜ் சிங் (341 ரன்கள்) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நான்கு முறை "ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள இவர், இன்று சொந்த ஊரில் முழுதிறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திடலாம். கிடைத்த வாய்ப்பை சுரேஷ் ரெய்னா சரியாக பயன்படுத்திக் கொண்டதால், இன்று யூசுப் பதான் களமிறங்குவது சந்தேகம். விராத் கோஹ்லி, கேப்டன் தோனி, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
ஜாகிர் மிரட்டல்:
பவுலிங்கை பொறுத்தவரை வேகத்தில் ஜாகிர் கான் மிரட்டி வருகிறார். இதுவரை 17 விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். வேகத்துக்கு கைகொடுக்கும் மொகாலி மைதானத்தில் முனாப் படேல், ஸ்ரீசாந்த், ஆஷிஸ் நெஹ்ரா உள்ளிட்டோரும் சாதிக்கலாம்.
அஷ்வின் எதிர்பார்ப்பு:
சுழலில் அனுபவ ஹர்பஜன் சிங் (6 விக்கெட்) இருப்பது பலம். இவருடன் இளம் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (4 விக்கெட்), துல்லியமாக பந்துவீசி எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கிறார். ஆனால் மொகாலி மைதானத்தில் சுழல் எடுபடாது என்பதால், ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்கலாம். பகுதிநேர சுழலில் "ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் (11 விக்கெட்) விக்கெட் வேட்டை நடத்தி வருவது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
"மிடில்-ஆர்டர் பலம்:
லீக் சுற்றில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான காலிறுதியில், கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தது. எனவே இன்றும் இவர்கள் அசத்தலாம். "மிடில்-ஆர்டரில் அனுபவ மிஸ்பா (192 ரன்கள்), யூனிஸ் கான் (172 ரன்கள்) இருப்பது பலம். இதுவரை 211 ரன்கள் எடுத்துள்ள உமர் அக்மல், தனது ரன் வேட்டையை தொடரலாம். அப்ரிதி (65 ரன்கள்), அப்துல் ரசாக் (101 ரன்கள்) உள்ளிட்ட "ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக இவர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் அசத்தல் வெற்றி பெறலாம்.
பலமான பந்துவீச்சு:
இம்முறை பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம் பந்துவீச்சு. சுழலில் கேப்டன் அப்ரிதி (21 விக்கெட்), விக்கெட் மழை பொழிகிறார். நான்கு முறை, நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இந்தியாவுக்கு எதிராக இன்று அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் உள்ளிட்ட இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் உமர் குல் (14 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். மொகாலி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், சோயப் அக்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். வாகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும்.
பலமான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி, வலுவான பவுலிங் பலத்துடன் உள்ள பாகிஸ்தானுடன் மோத இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
ஐந்தாவது முறை
உலக கோப்பை அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய நான்கு (1992, 96, 99, 2003) போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1996ல், 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2003ல், 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1999ல், 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது. கடந்த 1992ல், 173 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
* உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (4 போட்டி, 228 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சயீத் அன்வர் (3 போட்டி, 185 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் வெங்கடேஷ் பிரசாத் (2 போட்டி, 8 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முஸ்தாக் அகமது (2 போட்டி, 5 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
---
பாக்., ஆதிக்கம்
சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 119 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 69, இந்தியா 46 போட்டிகளில் வெற்றி கண்டன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
---
இம்மைதானத்தில் இதுவரை...
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் அரையிறுதி போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இங்கு, இவ்விரு அணிகள் இரண்டு (1999, 2007) போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* கடந்த 1999ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 196 ரன்களுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
* கடந்த 2007ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது. இதனை 49.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி "சேஸ் செய்தது.
* இந்திய அணி, இங்கு விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி, நான்கு தோல்வியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றது.
* இங்கு, அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் ஆறு போட்டிகளில் பங்கேற்று 281 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் சார்பில் இசாஜ் அகமது, 3 போட்டியில் பங்கேற்று 162 ரன்கள் எடுத்துள்ளார்.
* இங்கு, அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள இந்திய பவுலர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் (5 போட்டி, 9 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில் சக்லைன் முஷ்டாக் (3 போட்டி, 8 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
* இங்கு அதிக ரன்கள் எடுத்துள்ள அணிகள் வரிசையில் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கிறது. இம்முறை நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா.
---
எட்டு ஆண்டுகளுக்கு பின்...
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. முன்னதாக கடந்த 2003ல் செஞ்சுரியனில் நடந்த லீக் போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
---
நான்கு ஆண்டுகளுக்கு பின்...
இன்றைய அரையிறுதிப் போட்டியின் மூலம், பாகிஸ்தான் அணி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. கடைசியாக, கடந்த 2007ல் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க சோயப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
* கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு சில பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர். பின், அதே ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்திய மண்ணில் போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
---
அரையிறுதிக்கு வந்த பாதை
இந்தியா
லீக் சுற்று:
1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.
2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை ஆனது.
3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.
5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான்
லீக் சுற்று:
1. கென்யாவுக்கு எதிராக 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2. 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி.
3. கனடாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
4. நியூசிலாந்திடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
5. 7 விக்கெட் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.
6. ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காலிறுதி:
7. வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
---
சச்சின் "99
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 99 சதம் அடித்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 51, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய அரையிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கடந்து புதிய உலக சாதனை படைக்கலாம்.
* கடந்த 2007ல், பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின், 91 பந்தில் 99 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது "சூப்பர் பார்மில் உள்ள இவர், அன்று நழுவவிட்ட சதத்தை, இன்று பதிவு செய்யலாம். இதன்மூலம் சதத்தில் சதம் கடந்து புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

முக நூல்

Popular Posts