background img

புதிய வரவு

'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி!' - நமீதாவுக்கு மாணவர்கள் சூட்டிய பட்டம்!

கோலிவுட்டின் கவர்ச்சிப் புயல் நமீதாவுக்கு ஒரு புது பட்டப்பெயரைச் சூட்டியுள்ளனர், இளம் ரசிகர்கள். அதுவும் மாணவர்கள்.

அது... 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி'!

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நமீதா. அப்போதுதான் இந்தப் பட்டப் பெயரைச் சூட்டி தங்கள் 'பக்தி'யை வெளிப்படுத்தினர் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்.

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது.

இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். விதவிதமான கருத்துக்களைச் சொல்லும் நடனங்களை ஆடி அசத்தினர்.

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை நமீதா கலந்து கொண்டார். அவரை கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஜேப்பியார், நிர்வாகி ரெஜினா ஜேப்பியார் ஆகியோர் வரவேற்று, திறந்த வெளியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

நமீதாவைப் பார்த்ததும் மாணவர்களின் உற்சாகம் கரைபுரள ஆரம்பித்தது. அப்போது ஒரு மாணவர், 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி நமீதா' என குரல் எழுப்ப, அதை அப்படியே எதிரொலித்தனர் அனைத்து மாணவர்களும்.

திரும்பத் திரும்ப நமீதாவை இந்தப் பட்டப்பெயரிலேயே அழைக்க, மேடையேறிய நமீதா மாணவர்களின் தனக்கு சூட்டிய இந்தப் பட்டப் பெயரை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகக் கூறி, தனது முத்தங்களை காற்றில் பறக்கவிட, ஆர்ப்பரித்தனர் மாணவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களும்.

அதன் பிறகு நிகழ்ச்சியை வெகுநேரம் அமர்ந்து ரசித்தார் நமீதா. அங்கிருந்து கிளம்பும்போது மீண்டும் ஒரு முறை மேடையேறி, சிறப்பாக நடனமாடிய மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். அப்போதும், மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி என பெரும் ஆரவாரத்தோடு குரல் எழுப்பி அவரை வழியனுப்பினர்!

'கல்வியிற் சிறந்த தமிழ்நாடு'!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts