ஜெகன்மோகன்ரெட்டி தொடங்கியுள்ள “ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்” கட்சிக்கு ஆந்திர மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள பட்டாசு வெடித்து ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:- ஜெகன்மோகன்ரெட்டி தொடங்கியுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இழந்து விட்டனர். மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எந்தவித வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஏழை மருத்துவ- என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அரசு கட்டணம் செலுத்த தயக்கம் காட்டுகிறது.
இதனால் பொதுமக்கள் ஆந்திர அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே ஆந்திராவில் தேர்தல் எப்போது வந்தாலும் ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியை பிடிப்பார். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டிக்கு பிறகு மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒரே தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிதான்.
அவரை யாராலும் வீழ்த்த முடியாது. சந்திரபாபுநாயுடு தற்போது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அரசு கவிழ்ந்து விடும். ஆனால் அவர் காங்கிரசை மறைமுகமாக ஆதரித்து வருகிறார். அவர் காங்கிரசுடன் கூட்டணி சேர முயன்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :
Post a Comment