background img

புதிய வரவு

ஆண்டாளிடம் கிளியான ரிஷி

ஸ்ரீவில்லிபுத்தூர் என்று சொன்னதும் சட்டென்று நினைவுக்கு வருபவர் ஆண்டாள் (பால்கோவாவுக்கும் இந்த ஊர்தான் சிறப்புபெற்றது). ஆண்டாள் கோவிலில் சந்நிதியைத் திறந்ததுமே கோவில் பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை.

காராம் பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும். அதை அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப்பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து, பக்தர்களும் தரிசனம் செய்கிறார்கள். ஆண்டாளுக்குச் செலுத்தப்படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோவிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப்படுகிறது.

ஆண்டாளின் இடதுதோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் என ஆண்டாள் கேட்க.

சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன.

ஆண்டாளின் கையில் உள்ள கிளியைச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. இதற்கென்று கோவிலில் தனி ஆட்கள் இருக்கிறார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts