பூமியை கண்காணிக்க அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையம் “குளோரி” என்ற ஏவுகணையை தயாரித்தது. ரூ.1908 கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைகோள் நேற்று ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ராக்கெட் அதன் சரியான நீள்வட்ட பாதையில் இயங்கவில்லை.
இதனால் அதன் செயல்பாடு தோல்வி அடைந்தது.இறுதியில் ராக்கெட்டுடன் செயற்கைகோள் தென் பசிபிக் கடலில் விழுந்தது. இதனால் நாசா விஞ்ஞானிகள் சோகமும், அதிர்ச்சியும் அடைந்தனர். குறிப்பிட்ட இலக்கை அடைந்தவுடன் ராக்கெட்டும், செயற்கை கோளும் தனித்தனியே பிரியாததுதான் இந்த தோல்விக்கு காரணம் என நாசா செயற்கைகோள் இயக்குனர் ஒமர் பயேஷ் தெரிவித்தனர்.
மேலும் தொழில் நுட்ப கோளாறு காரணமே இந்த தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அதற்கான ஆய்வில் என்ஜினீயர்கள் ஈடுபட உள்ளனர். எனவே பசிபிக் கடலில் விழுந்த ராக்கெட் மற்றும் செயற்கை கோளை தேடும் பணி நடை பெறுகிறது.

0 comments :
Post a Comment