background img

புதிய வரவு

கேரளாவில் முதல்வர் போட்டியிட தடை : சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பம்

திருவனந்தபுரம் : "சட்டசபை தேர்தலில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பினராயி விஜயனும் போட்டியிடக் கூடாது' என, கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, களத்தில் குதித்துள்ளது.
தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் இக்கட்சிக்கு ஆதரவு தரும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 93 தொகுதிகளில், மா.கம்யூ., கட்சி போட்டியிட உள்ளது. இத்தேர்தலில், தற்போது மாநில முதல்வராக உள்ள வி.எஸ். அச்சுதானந்தன் போட்டியிடுவாரா என்ற கேள்வி, பல நாட்களாக கட்சித் தொண்டர்கள் உட்பட மாநில வாக்காளர்களிடம் இருந்து வந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போதெல்லாம், "நான் தேர்தலில் போட்டியிடவேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும்' என, கூறி வந்தார். இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகளில் யார் யாரை நிறுத்துவது என்ற பட்டியலை மாவட்ட கட்சி நிர்வாகிகள் தயாரித்து அனுப்ப, கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது.
திருவனந்தபுரத்தில் நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் கராத் தலைமையில், மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. நான்கு மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில் வி.எஸ். அச்சுதானந்தன், பினராயி விஜயன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர்கள் போட்டியிடாததால், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி தேர்தலை வழி நடத்துவார் என்றும், அவர், தலசேரி தொகுதியில் நிறுத்தப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts