background img

புதிய வரவு

அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தை காங்கிரசிடம் தள்ளிவிட்ட திமுக

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு வட பகுதிகளில்தான் அதிக தொகுதிகள் கிடைத்துள்ளன. கிழக்கு மண்டலத்தில் வெறும் 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 63 தொகுதிகள் கிடைத்துள்ளன. இதில் வடக்கு மண்டலத்தில் 20 தொகுதிகள் கிடைத்துள்ளன. இங்குதான் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கிடைத்துள்ளன.

தென் மண்டலத்தில் 19, மேற்கு மண்டலத்தில் 11, கிழக்கு மண்டலத்தில் 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் தொகுதிகள் தேவை என்று காங்கிஸ் கூறி வந்தபோதிலும், மூன்று மாவட்டங்களில் அக்கட்சிக்கு ஒரு சீட் கூட கொடுக்கப்படவில்லை.

தேனி, தர்மபுரி, பெரம்பலூர் - தொகுதிகள் இல்லை:

தேனி, தர்மபுரி, பெரம்பலூர் மாவட்டங்களில்தான் காங்கிரஸுக்கு தொகுதிகள் எதுவும் கிடைக்கவில்லை.

அதேபோல கடந்த முறை வென்ற தொகுதிகளில் இந்த முறை மதுரை மேற்கு, நாமக்கல் ஆகியவை காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை.

மதுரை மேற்கைப் பறித்த திமுக அதற்குப் பதில் மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு ஆகிய இரு தொகுதிகளை காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

அதாவது மதுரை மாநகரில் உள்ள 5 தொகுதிகளில் 2 காங்கிரஸுக்குப் போயுள்ளது. மீதமுள்ள மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது.

அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் திகழ்வதால் அங்கு திமுக அதிகம் போட்டியிடவில்லை. மாறாக அந்தப் பகுதியில் 10 தொகுதிகள் உள்பட மேற்கு மண்டலத்தில் மொத்தமாக 11 தொகுதிகளையும் காங்கிரஸுக்கே கொடுத்து விட்டது. இது தவிர அப் பகுதியில் மேலும் 7 தொகுதிகளையும் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திடம் திமுக தரவுள்ளது. இதனால் கொங்கு மண்டலத்தை திமுக கிட்டத்தட்ட கை கழுவிவிட்டதாகவே தெரிகிறது.

சென்னையிலும் கூட அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளான ராயபுரம், மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளை இந்த முறை காங்கிரஸுக்கே கொடுத்து விட்டது. தான் வென்ற அண்ணா நகர், புதிதாக உருவாகியுள்ள திரு.வி.க நகரையும் காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 4 தொகுதிகள்:

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, நான்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் கடையநல்லூர், வாசுதேவநல்லூர், நான்குநேரி, ராதாபுரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் காங் போட்டியிடுகிறது.

இதில் கடையநல்லூர், நான்குநேரி தொகுதியில் தற்போதைய எம்எல்ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம் ஆகிய தொகுதிகளில் புது முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் இருந்தன. இதில் கடையநல்லூர், நான்குநேரி,சேரன்காதேவி ஆகிய தொகுதிகளைதான் காங் கைப்பற்றியது. தொகுதி சீரமைப்பை தொடர்ந்து சேரன்மகாதேவி நீக்கப்பட்டது. இதற்கு பதிலாக ராதாபுரம் தொகுதி ஓதுக்கப்பட்டுள்ளது. இதனால் ராதாபுரம் தொகுதியை திமுக வசமிருந்து காங் கைப்பற்றியது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts