background img

புதிய வரவு

சென்னை வந்தனர் இந்திய வீரர்கள்

சென்னை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் நேற்று சென்னை வந்தனர்.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. இதில் இந்திய அணி, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு "டை, ஒரு தோல்வி உட்பட 7 புள்ளிகள் பெற்று, "பி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி, வரும் 20ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்கள் நேற்று சென்னை வந்தனர்.
சச்சின் வரவில்லை:
சச்சின், காம்பிர், யுவராஜ், சேவக், ஜாகிர் உள்ளிட்ட ஐந்து முன்னணி வீரர்கள் நேற்று வரவில்லை. இவர்கள் இன்று சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் தோனி, யூசுப் பதான் உள்ளிட்ட மற்ற வீரர்கள் அனைவரும் டில்லியில் இருந்து சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்ற இவர்கள், நேற்று பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. இன்று முதற்கட்ட பயிற்சியை துவக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts