background img

புதிய வரவு

‌கேட்பதெல்லாம் கொடுக்க முடியுமா ? கருணாநிதி அதிருப்தி: 63 "சீட்' கேட்டு காங்., பிடிவாதம் :தி.மு.க., இன்று முடிவு

சென்னை : ""காங்கிரஸ் கட்சியினர் 63 இடங்கள் கேட்கின்றனர். அதுவும் அவர்கள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இது குறித்து இன்று நடக்கவுள்ள தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழுவில் விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை: சட்டசபை தேர்தலுக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணியில் தி.முக., ஈடுபட்டது.சோனியாவை நான் டில்லியில் சந்தித்த பின், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என, அறிவித்தேன். காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது, 2006ம் ஆண்டு தேர்தலில், போட்டியிட்ட விவரங்கள் தி.மு.க., சார்பில் எடுத்துக் கூறப்பட்டது. தி.மு.க., - காங்கிரஸ் - பா.ம.க., மீண்டும் உறவு கொண்டுள்ள நிலையில், அந்த கட்சிகள் போட்டியிட்ட இடங்களைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மார்க்சிஸ்ட் கமயூ., இந்திய கம்யூ., போட்டியிட்ட 23 இடங்களை புதிதாக சேர்த்துள்ள விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் போக, மீதமுள்ள இடங்களை தி.மு.க., - காங்கிரஸ் பகிர்ந்து கொள்ளலாம் என பேசப்பட்டது.
அவ்வாறு கணக்கிட்ட போது, காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன. அந்த இடங்களை அதிகமாக்க வேண்டும் என்ற காரணத்தால், 51 இடங்கள் 53 என்றாகி பின், 55 என்றாகி, 58 என்றாகி கடைசியாக 60 இடங்கள் என்று குலாம் நபி ஆசாத் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதை மேலிடத்தில் தெரிவித்து விட்டு உறுதி செய்வதாகக் கூறினார். ஆனால், அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு, இன்று (நேற்று) இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 63 சீட்கள் ஒதுக்க வேண்டும் என்றும், கேட்கும் தொகுதிகள் அனைத்தையும் தரவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
காங்கிரசிற்கு 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட்பதும், அவர்கள் கேட்கும் இடங்களையெல்லாம் கொடுக்க வேண்டும் என கேட்பதும் முறைதானா என்பதை, அந்த கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து இன்று மாலையில் நடக்கவுள்ள தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழுவில் உரிய முடிவு எடுக்கப்படும்.
சோனியா தலையிடுவாரா ? கருணாநிதி இவ்வாறு கூறியதையடுத்து காங்., மேலிடம் என்ன செய்வெதன தெரியாமல் திகைத்து போய் இருக்கிறது. இந்த விவகாரத்தில் சோனியா , பிரணாப் தலையிட்டு பிரச்னைக்கு முடிவு காண முயற்சி மேற்கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி வீட்டில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மற்றும் மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts