background img

புதிய வரவு

பியுஸ் சாவ்லாவுக்கு தோனி ஆதரவு

புதுடில்லி: "கடந்த இரண்டு போட்டிகளில் சரியாக செயல்படாத பியுஸ் சாவ்லா, மனதளவில் பக்குவப்பட்டு "பார்முக்கு' திரும்ப வாய்ப்பு அளிப்பதற்காகவே, அணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தொடரில் பேட்டிங்கில் அசத்தும் இந்திய வீரர்கள், பவுலிங்கில் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் வாய்ப்பு பெற்ற பியுஸ் சாவ்லா, தொடர்ந்து சொதப்பி வந்தார். இதனால் நெதர்லாந்துக்கு எதிராக அஷ்வின் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் பியுஸ் சாவ்லாவுக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதில் 10 ஓவர்களில் 47 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:
இளவயதிலேயே அணியில் இடம் பிடித்த பியுஸ் சாவ்லா, இப்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். பயிற்சி போட்டிகளில் அசத்திய இவர், இங்கிலாந்து, அயர்லாந்துக்கு எதிராக மோசமாக செயல்பட்டதால், மக்கள் அவரை விமர்சித்தனர். இதனால் பியுஸ் சாவ்லா, சற்று நெருக்கடியில் இருந்தார். பொதுவாக பவுலர்கள் அதிக விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால், சிறப்பான மன நிலையில் இருக்க வேண்டும். அவர் "பார்முக்கு' திரும்ப வேண்டும் என்பதற்காகவே மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது. இது அவருக்கு முக்கியமான போட்டி. இதில் வழக்கத்துக்கு மாறாக, இயல்பாக பவுலிங் செய்தார். என்னைப் பொறுத்தவரையில் சாவ்லாவின் செயல்பாடு திருப்தி தருகிறது.

அஷ்வினுக்கு பாராட்டு:

அஷ்வினைப் பொறுத்தவரை மனதளவில் "ஸ்டிராங்கான' வீரர். அவருக்கு எப்போது வாய்ப்பு கொடுத்தாலும் அதில் சாதித்து விடுவார். இவருக்கு எதிர்வரும் போட்டிகளில் வாய்ப்புத் தர எண்ணியுள்ளேன். இத்தொடரின் அடுத்த சில போட்டிகள் வரும் போது, இன்னும் அதிக விறுவிறுப்படையும். அப்போது ஹர்பஜன் கட்டாயம் சாதிக்க முயற்சிப்பார்.

சோதனை முயற்சி:

நெதர்லாந்துக்கு எதிராக பேட்டிங் ஆர்டரில் சில பரிசோதனைகள் செய்து பார்த்தோம். இந்நிலையில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் விழுந்ததால், மிடில் ஓவர்களில் சற்று நெருக்கடி ஏற்பட்டது, அவ்வளவு தான். இது எந்த அணிக்கும் ஏற்படத்தான் செய்யும். மற்றபடி எப்படி வென்றாலும் அது வெற்றி தான். ஏனெனில், போட்டியில் தொடர்ந்து வெற்றி பெறுவது தான் முக்கியம்.
நாங்கள் மோசமாக செயல்பட்டோம் என்று வைத்துக் கொண்டாலும், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளோம். இந்த அனுபவம் வலிமையான அணிகளுக்கு எதிராக விளையாடும் போது, கட்டாயம் கைகொடுக்கும்.
பேட்டிங் முன்னேற்றம்:
பேட்டிங்கில் அனைத்து வீரர்களும் நம்பிக்கை தருகின்றனர். விரைவில் "நாக் அவுட்' சுற்று போட்டிகள் வரவுள்ள நிலையில், அனைத்து பிரிவுகளிலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. இன்னும் இரண்டு பெரிய அணிகளுடன் மோதவுள்ள நிலையில், தொடர்ந்து சோதனைகள் செய்து பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை.

சபாஷ் யுவராஜ்:

யூசுப் பதான் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துபவர். அவர் நீண்ட நேரம் நிலைத்து விளையாடி, அணியின் ரன்ரேட்டை <உயர்த்துவார் என்று தான் முன்னதாக களமிறக்கினோம். ஆனால் ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை. இருப்பினும் அணியில் அவருக்கு உறுதியான இடம் <<உண்டு.
தவிர, யுவராஜ் சிறந்த வீரர் என்பதில் எனக்கு எப்போமே நம்பிக்கை உள்ளது. தற்போது <உலக கோப்பை தொடரில் ரன்கள் குவிப்பதுடன், விக்கெட்டுகளையும் வீழ்த்துவது பெரிதும் வரவேற்கத்தக்க விஷயம்.
இவ்வாறு தோனி கூறினார்.

யுவராஜ் சிங் மகிழ்ச்சி:

உலக கோப்பையில் அசத்துவது குறித்து யுவராஜ் சிங் கூறுகையில்,"" கடந்த ஆண்டு முழுவதும் காயம் காரணமாக அணிக்கு வருவதும், போவதுமாக இருந்தேன். இந்நிலையில் பார்முக்கு திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய நிலையில், மிடில் ஓவர்களில் நிலைத்து விளையாடி, கடைசிவரை களத்தில் இருந்து அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மற்றபடி சூழ்நிலைக்கேற்ப பேட்டிங்கை மாற்றிக்கொள்வேன்,'' என்றார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts