background img

புதிய வரவு

இனிமையானவர் விஜய்: இலியானா

"கேடி" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா. முதல்படமே இவருக்கு சரியாக அமையவில்லை. இதனால் கோலிவுட்டில் இருந்து ஓரம் கட்டப்பட்ட இலியானா டோலிவுட்டுக்கு போனார். தமிழில் இவருக்கு கிடைக்காத மதிப்பு தெலுங்கில் கிடைத்தது. இதனால் அங்கு நம்பர்-1 நடிகையாகவும் ஆனார். இப்போது நீண்ட இடை‌வெளிக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் கால் பதிக்கிறார்.

இந்தியில் சக்கபோடு போட்ட "3-இடியட்ஸ்" படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார். படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் சூட்டிங் கடந்த மாதம் தான் ஊட்டியில் தொடங்கியது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடிக்கிறார். விஜய்யுடன், இலியானா நடிப்பது இதுவே முதல்முறை. இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து இலியானா கூறியாதாவது, தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்க வந்துள்ளேன். அதுவும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேன். இதுதான் அவருடன் நான் பண்ணும் முதல்படம். விஜய்யுடன் நடித்தபோது சற்று பயம் இருந்தது. ஆனால் அவருடன் பழகிய போது அவரை பற்றி நன்கு புரிந்து கொண்டேன். உண்மையில் விஜய் மிகவும் நல்லவர், மற்றவர்களுடன் பழகுவதில் மிகவும் இனிமையானவர். அவருடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts