background img

புதிய வரவு

தனித் தெலுங்கானா கிடைக்காவிட்டால் பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்; நடிகை விஜயசாந்தி ஆவேசம்

ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி போராடி வருகிறது. இக் கட்சி எம்.பி.க்கள் சந்திரசேகரராவ், நடிகை விஜயசாந்தி உள்பட பலர் தெலுங்கானா கோரி பாராளுமன்றத்தில் கோஷம் எழுப்பினர். இந்த அமளி காரணமாக சபை அடுத்தடுத்து 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. மாலையிலும் அமளி நீடித்ததால் சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில் விஜயசாந்தி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கானா தனி மாநில போராட்டம் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு தனி மாநிலம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி நேற்று எங்கள் கட்சி எம்.பி.க்கள், மற்ற கட்சியை சேர்ந்த ஆதரவு எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டோம். தெலுங்கானா கிடைக்கா விட்டால் பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம். தெலுங்கானா மக்கள் அனைவரும் ஒன்று பட்டு போராடி வருகிறார்கள். 10-ந் தேதி ஐதராபாத் நகரை முற்றுகையிட்டு மிகப் பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts