background img

புதிய வரவு

தி.மு.க. கூட்டணியில் கொங்கு நாடுமுன்னேற்ற கழகம் போட்டியிட விரும்பும் தொகுதிகள்

கொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிட விரும்பும் 15 தொகுதிகளை தி.மு.க.விடம் கொடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக தி.மு.க. இந்த தேர்தலில் முதன்முதலாக கொ.மு.க.வுடன் கைகோர்த்துள்ளது. 2009 பாராளுமன்ற தேர்தலில் கொ.மு.க. முதன்முதலாக தனித்து போட்டியிட்டு அதிக ஓட்டுகள் பெற்றது.

இதன் மூலம் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்க கூடிய சக்தியாக கொங்கு நாடு முன்னேற்ற கழகம் விளங்குகிறது. தி.மு.க.- கொ.மு.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டவுடன் இரண்டு தரப்பு தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். போட்டியிட விரும்பும் தொகுதிகளை அடையாளம் கண்டு அவற்றை தி.மு.க.விடம் கொடுக்க கொ.மு.க. முடிவு செய்துள்ளது.

15 தொகுதிகளை தேர்வு செய்து கொடுக்கிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் பெற்ற தொகுதிகளை குறிப்பிட்டு கேட்கவும் முடிவு செய்துள்ளனர். இது குறித்து கொங்கு நாடு முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறியதாவது:-

கொங்கு மக்களின் கோரிக்கைகள், நீண்டகால பிரச்சினைகளை முன் வைத்து தி.மு.க.விடம் பேசினோம். அவர்கள் நிறைவேற்றி தருவதாக ஒப்புக்கொண்டார்கள். கொங்கு மண்டலத்தினர் வளர்ச்சியை மையமாக வைத்தே இந்த கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவே எங்கள் நோக்கமாகும். தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம். கொ.மு.க. போட்டியிடும் 7 தொகுதிகளை தேர்வு செய்வதற்கு 15 தொகுதிகளை தேர்வு செய்து கொடுக்கிறோம்.ஓரிரு நாட்களில் தி.மு.க. குழுவிடம் போட்டியிட விரும்பும் பட்டியல் கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொங்கு நாடு முன்னேற்ற கழகம் போட்டியிட விரும்பி பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, சூலூர் பல்லடம், திருப்பூர் வடக்கு, காங்கயம், தொண்டமுத்தூர், மடத்துகுளம், அரவக்குறிச்சி, அந்நியூர், ஈரோடு மேற்கு, கோபி உள்ளிட்ட 15 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளன. இதில் திருப்பூர் வடக்கு தொகுதி கிடைத்தால் நந்தகுமார், பெருந்துறை அல்லது காங்கயம் கிடைத்தால் கே.கே.சி.பாலு, சூலூரில் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பொள்ளாட்சி ஒதுக்கப்பட்டால் நித்யானந்தம் அல்லது இளம்பரிதி, தொண்டமுத்தூர் கிடைத்தால் லோகநாதன், அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கினால் சக்தி கோச் நடராஜ் அல்லது நிர்மலாபெரியசாமி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நேற்று நடந்த கொ.மு.க. உயர்மட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைந்து இணக்கமாக தேர்தல் பணியாற்றுமாறு கட்சி நிர்வாகிகளிடம் கொ.மு.க. தலைமை அறிவுறுத்தியுள்ளது. எல்லா தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts