background img

புதிய வரவு

இந்தி நடிகர் நிதின் முகேசுடன் அசின் காதல்?

பிரபல இந்தி நடிகர் நிதின் முகேஷ்வுடன் அசின் காதல் வயப்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசு கிசுக்கள் பரவி உள்ளது. அங்குள்ள பத்திரிகைகளில் இச்செய்தி வெளி வந்துள்ளது. இந்தி கஜினி மூலம் அசின் மும்பை சென்றார். அது ஹிட்டானதால் ஒரு படத்திலேயே உலகெங்கும் பிரபல மானார்.

லண்டன் டீரிம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். ரெடி படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். சல்மானையும் அசினையும் இணைத்து வதந்திகள் பரவியது. இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. இருவரும் அதை மறுத்தனர்.

இந்த நிலையில் நிதின் முகேசை காதலிப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அசினுக்காக தயாரிப்பாளர்களிடம் நிதின் வாய்ப்பு கேட்பதாக கூறப்படுகிறது. தனது படங்களில் அவரை ஜோடியாக்கவும் நிர்ப்பந்திக்கிறாராம். ஆனால் இது வெறும் வதந்திதான் என்று நிதின் மறுத்தார். நட்பாக பழகினாலே காதல் என கதை கட்டி விடுகின்றனர் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts