background img

புதிய வரவு

தமிழக சட்டசபை தற்காலிக சபாநாயகராக செ.கு.தமிழரசன் நியமனம்;கவர்னர் பர்னாலா உத்தரவு

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.

இதற்கான உத்தரவை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா நேற்றிரவு பிறப்பித்தார். இந்த தகவலை சட்டசபை செயலாளர் எ.எம்.பி. ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts