சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியின் 30 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., மூன்று தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. அணைக்கட்டு தொகுதியில், 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து, 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் பாண்டுரங்கன். 2001-2006 காலத்தில் அமைச்சராக இருந்த போது, தொகுதிக்கு அடிக்கடி வந்து சென்றார். 2006-2011 காலகட்டத்தில், அவர் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திய தி.மு.க.,வினர், தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றினர். தங்களுக்கு தொகுதி கிடைக்கும் என காத்திருந்த தி.மு.க.,வினர், பா.ம.க.,வுக்கு தொகுதி ஒதுக்கியதால் அதிர்ச்சி அடைந்தனர். பா.ம.க., வேட்பாளராக போட்டியிட்ட கலையரசுக்கு, கட்சி, சொந்த செல்வாக்கு கிடையாது. தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டதால் வெற்றி பெற்றார்.
செஞ்சி தொகுதியில் பா.ம.க.,வுக்கு செல்வாக்கு இல்லை. தே.மு.தி.க., வேட்பாளருக்கு வழங்கப்பட்ட முரசு சின்னமும், சுயேச்சை வேட்பாளர் சிவகுமாருக்கு வழங்கப்பட்ட கூடை சின்னமும், பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தன. இது, கிராமப்புற வாக்காளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. தே.மு.தி.க., வேட்பாளர் சிவலிங்கம், 75 ஆயிரத்து, 215 ஓட்டுகள் பெற்றார். பா.ம.க., வேட்பாளர், 77 ஆயிரத்து, 26 ஓட்டுகள் பெற்றார். முரசு சின்னம் என நினைத்து, கூடை சின்னத்துக்கு பலர் ஓட்டளித்தனர். இந்த வகையில், முரசு சின்னத்துக்கு விழவேண்டிய, 8,627 ஓட்டுகள் கூடை சின்னத்துக்கு விழுந்தன. இதனால், தே.மு.தி.க., வேட்பாளர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் தான், பா.ம.க., செஞ்சி தொகுதியில் வெற்றி பெற முடிந்தது.
கடந்த சட்டசபை தேர்தலில், ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் வெற்றி பெற்றார். காடுவெட்டி குரு தோல்வியடைந்தார். அன்றைய தினம் ஏற்பட்ட தோல்விக்கு கூட்டணியான தி.மு.க.,வினரின் உள்ளடி வேலையால் தான் அ.தி.மு.க., வெற்றி பெற்றது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் பிறகு, தி.மு.க., மற்றும் பா.ம.க., கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்படவும், காடுவெட்டி குரு தோல்வி தான் காரணமாக அமைந்தது. ஐந்தாண்டுக்கு பிறகு, கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- பா.ம.க., கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க குரு சென்ற போது, "உனக்கு ஜெயம் கொண்டாச்சி' என, முதல்வர் கருணாநிதி கூறினார்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க.,வினர் முழுமூச்சுடன் ஜெயங்கொண்டம் பகுதியில் தேர்தல் பணியாற்றினர். கனிமொழி உள்ளிட்ட அனைத்து தி.மு.க., - பா.ம.க.,- வி.சி., கட்சி தலைவர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி குரு வெற்றி பெறுவதற்காக பிரசாரம் செய்தனர்.
ஜெயங்கொண்டம் தொகுதி மக்கள் மத்தியிலும், குரு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் இளவழகனும், ஜெயங்கொண்டம் தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத மூப்பனார் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜெயங்கொண்டத்தில் வன்னியர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர். இத்தகைய பல்வேறு காரணங்களால் ஜெயங்கொண்டம் தொகுதியில், 15,338 ஓட்டுகள் வித்தியாசத்தில் காடுவெட்டி குரு வெற்றி பெற்றுள்ளார்.

0 comments :
Post a Comment