அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் லீ (46), இவர் குடியரசு கட்சியின் எம்.பி., ஆவார். இவருக்கு திருமணமாகிவிட்டது. 34 வயது மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இவர் வெப்சைட் மூலம் ஒரு இளம் பெண்ணுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டார்.
விளையாட்டாக அவருக்கு சட்டை இல்லாத கட்டுமஸ்தான உடலமைப்புடன் கூடிய தனது அரை நிர்வாண போட்டோவை “இ-மெயில்” மூலம் அனுப்பினார். அத்துடன் ஒரு கடிதம் எழுதினார். அதில் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் விரும்பினால் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
அந்த கடிதமும் அவரது அரை நிர்வாண போட்டோவும், இன்டர் நெட்டில் வெளியானது. இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணமான ஒருவர் இது போன்று பொய்யான தகவலை கொடுத்து ஒரு இளம் பெண்ணை ஏமாற்றியது ஒரு மோசடி என கூறப்பட்டது.
இதை தொடர்ந்து கிறிஸ்டோபர் லீ தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்கான கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகர் ஜான் ஏ போக்னருக்கு அனுப்பி வைத்தார். அக்கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து லீ கூறும்போது தான் வேண்டுமென்று இக்காரியத்தில் ஈடுபடவில்லை என்றும், விளையாட்டாக செய்தது வினையாகி விட்டது என்றும் கூறியுள்ளார். இந்த செயலால் எனது குடும்பத்தினரும், அலுவலக ஊழியர்களும், எனது தொகுதி மக்களும் மிகுந்த மன வருத்தத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
இதற்காக அவர்களிடம் உளமாற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது இந்த நடவடிக்கையால் நான் வெறுக்க தக்க மோசமான மனிதன் அல்ல. மக்களின் சிறந்த நண்பன்தான் என இமெயில் மூலம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment