background img

புதிய வரவு

“பிராட்பாண்ட்” சேவை: பி.எஸ்.என்.எல். ஏஜெண்டு நியமனத்தில் முறைகேடு; விசாரணை நடத்த கபில்சிபல் உத்தரவு

தொலை தொடர்பு துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு இப்போது விசுவரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் மத்திய டெலிபோன் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலும் முறைகேடு நடந்து இருப்பது வெளியே தெரியவந்துள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் “விமக்ஸ்” எனும் “பிராட்பாண்ட் வயர்லெஸ்” சேவையை பெருநகரங்களில் வழங்க தனியார் நிறுவனங்களை ஏஜெண்டுகளாக நியமித்தது. நாடு முழுவதும் 4 நிறுவனங்கள் ஏஜெண்டுகளாக நியமிக்கப்பட்டன.

அவர்கள் “பிராட்பாண்ட் வயர்லெஸ்” சேவையை வழங்குவதுடன் 50 ஆயிரம் பி.எஸ்.என்.எல். கோபுரம் மற்றும் 20 ஆயிரம் வளாகங்கள் அமைக்கும் பணியையும் சேர்த்து செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இந்த நிறுவனங்களிடம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் நுழைவு கட்டணம் எதுவும் வாங்கவில்லை. மேலும் வருடாந்திர லாப பங்குகளையும் பெறவில்லை. அதே நேரத்தில் இந்த சேவை பணிக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி நுழைவு கட்டணமாக செலுத்தி உள்ளது.

அந்த கட்டணத்தை கூட ஏஜெண்டுகளிடம் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெறவில்லை. இந்த ஒதுக்கீடும் வெளிப்படையாகவோ அல்லது ஏலம் மூலமோ நடக்கவில்லை. ஒதுக்கீட்டை பெற்றதற்கு பிறகு அந்த நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அதிக தொகைக்கு விற்று பெரிய அளவில் லாபம் சம்பாதித்து உள்ளன.

எனவே இதில் முறைகேடு நடத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி மத்திய தொலை தொடர்பு மந்திரி கபில்சிபல் தொலைத்தொடர்பு துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் போல இந்த விவகாரமும் பெரிய அளவில் வெடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts