
நியூசிலாந்தை சேர்ந்த ஒரு விளையாட்டு நிறுவனம் ஒரு புதியவகை ரோபோவை வடிவமைத்து வருகிறது. அதன்மூலம் மூளையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்படும் முதியோருக்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த “ரோபோ” கற்றுத்தரும் “குங்பூ பங்க்” எனப்படும் புதிய விளையாட்டின் மூலம் அந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது. இந்த “ரோபோ”வை நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர்.
இதை மேலும் மாற்றியமைத்து முதியோர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்க முடியும் என கருதினர். அதற்கான முயற்சியிலும் தற்போது அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், தென் கொரியாவின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்பு ஆய்வு மையமும் இணைந்து செயல்படுகிறது.
இந்த “ரோபா”க்கள் முதியோர்களுக்கு பலவிதங்களில் உதவியாக இருக்கும். ரத்த அழுத்த சோதனை, உடலில் இருக்கும் இன்சுலின் அளவு போன்றவற்றை கணக் கெடுத்து பதிவு செய்து கொள்ளும். பின்னர் அதில் பொருத்தப் பட்டுள்ள வயர்லெஸ் இணைப்பு மூலம் டாக்டர் அல்லது நர்சுகள் அறிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில் முதியவர் ஒருவர் தவறி கீழே விழுந்து கிடந்தால் கூட அதுபற்றிய தகவலையும் இது தெரிவிக்கும். இந்த தகவலை “ரோபோ”வை வடிவமைத்து வரும் விஞ்ஞானி டேவிட் காட்டர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, முதியோர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்து மாத்திரைகள் பற்றிய தகவலை தெரிவித்தல் மற்றும் அவர்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தல் போன்ற பணிகளை செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment