background img

புதிய வரவு

முதல்வராக எடியூரப்பா நீடிப்பார் : கர்நாடக பா.ஜ., தலைவர் தகவல்

பெங்களூரு : ""கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பாவே நீடிப்பார்,'' என, அம்மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கலாம் என, செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில், கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கர்நாடக சட்டசபைக்கு முன்னதாகவே தேர்தல் நடக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும், இடைத்தேர்தல் வர உள்ளதாக மக்கள் மனதை குழப்ப முயற்சி செய்கின்றன. அவர்களின் சதித் திட்டம் மக்களிடம் எடுபடாது. 2013ம் ஆண்டு தான் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கும். முதல்வர் எடியூரப்பாவை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கும் அவரே முதல்வராக நீடிப்பார். அவரது தலைமையின் கீழ் நாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவோம்.தென்மாநிலங்களில், முதன் முறையாக கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்துள்ளது. பா.ஜ., பொறுப்பேற்று ஆயிரமாவது நாள் நிறைவடைய உள்ளது. இதை கொண்டாடும் வகையில், பா.ஜ., சார்பில், வரும் 20ம் தேதி மிகப்பெரிய பேரணி நடக்க உள்ளது. இதில், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கலந்து கொள்வார்.இவ்வாறு ஈஸ்வரப்பா கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts