background img

புதிய வரவு

சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டங்கள்: டிக்கெட் விற்பனை!

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 போட்டிகள் நடக்கிறது. மேலும் உலக கோப்பை போட்டிக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் 2 பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் வருகிற 12-ந் தேதியும், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் 16-ந் தேதியும் நடக்கிறது.

இரு போட்டிகளும் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இந்தியா-நியூசிலாந்து பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் விற்பனை 14-ந் தேதி நடக்கிறது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.50. அதிகபட்ச விலை ரூ.500 ஆகும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts